Monday, May 24, 2010

புயலுக்கு பெயர் வந்தது எப்படி? .....

“லைலா” புயலுக்கு அந்த பெயர் வந்தது எப்படி? என்பது பலருடைய கேள்வி. அதற்கு பதில் இதோ...

புயலுக்கு பெயர் சூட்டும் வழக்கம் 20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில்தான் முதன் முதலில் அறிமுகமானது. அப்போது, வானிலை அதிகாரிகள் தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை புயலுக்கு சூட்டினார்கள்.

1953-ஆம் ஆண்டு புயல்களுக்கு பெயர் சூட்டுவதை அமெரிக்கா முறைப்படுத்தியது. அதற்கான பெயர் பட்டியலையும் தயாரிக்கப்பட்டது.

இந்திய துணைக்கண்டத்தில் 2004-ம் ஆண்டு முதல் புயல்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், மாலத்தீவுகள், மியான்மர், ஏமன், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் பரிந்துரைத்த பெயர்கள் சூட்டப்படுகின்றன.

இந்திய துணைக்கண்டத்தில் வீசும் புயல்களுக்கு மொத்தம் 64 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நர்கீஸ், நிஷா அய்லா, ராஷ்மி உள்பட 22 பெயர்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன.இப்போது, சென்னை நகரை ஒரே நாளில் மழையாக வந்து மிரட்டி விட்டு, ஆந்திராவை பெரும் பாடுபடுத்திய புயலுக்கு “லைலா” என்று வானிலை ஆய்வு மையம் பெயர் சூட்டியது.

“லைலா” என்றால் “கருங்கூந்தல் அழகி” என்பது பொருள். பெர்சியன் மொழியில் இதற்கு இரவு என்பது அர்த்தம். இந்த பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக் கப்பட்டு புயல்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. கோடைக்காலத்தில் திடீரென்று கருமேகங்களை அள்ளி வந்ததால் இந்த புயலுக்கு “லைலா” என்ற பெயரை தேர்ந்து எடுத்தனர்.

உலகம் முழுவதும் எளிதாக அடையாளம் காண்பதற்காகவும், எச்சரிக்கை விடவும் புயலுக்கு பெயர் சூட்டப்படுகிறது. அடுத்து இந்திய துணை கண்டத்தில் உருவாகும் புயலுக்கு சூட்டுவதற்கு “பாண்டு” என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளனர். இது இலங்கையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment