மீன்வளத்துறையை ஒழுங்குபடுத்தாவிட்டால் 40 ஆண்டுகளில் கடல் மீன்கள் அனைத்துமே அழிந்து விடும் அபாயம் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த அவர்கள், நமக்குக் கிடைக்கும் பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் இத்தகைய முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. மீன்களுக்கென பாதுகாப்பு மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட நூறு கோடி மக்கள் மீன்வளத்தை நம்பி இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Monday, May 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment