Friday, July 30, 2010

ஸ்டெர்லைட் விவகாரம்: களை கட்டும் போராட்டங்கள்

ஸ்டெர்லைட் விவகாரம்:
களை கட்டும் போராட்டங்கள்... கல்லா கட்டுவதற்கா?






மத்திய அரசுக்கு 747 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவன துணைத்தலைவர் வரதராஜன் கைது’’ என்று எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வருவதை, அந்த நிறுவனம் தடுக்க எத்தனையோ முயற்சிகளில் இறங்கியது. அதில் ஓரிரு பத்திரிகைகள் மட்டும் பின்வாங்கி, அடக்கி வாசித்தது. ஆனால், பெரும்பாலான பத்திரிகைகளிலும் டி.வி.க்களிலும் ‘ப்ளாஷ்’ செய்தியாக வந்ததும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராட்டங்கள் களை கட்டியுள்ளன.

தூத்துக்குடியில் 1996ல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடங்கும் போதே, கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாமிரத் தாதுவை இறக்குமதி செய்து, அதைப்பிரித்தெடுத்து தமிரத் தகடு மற்றும் கம்பி உற்பத்தி செய்யும் இந்த ஆலையை திறக்கக் கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்கள் சத்தமின்றி ஓய்ந்தன.

இப்போது வரி ஏய்ப்பு விவகாரம் அம்பலமானதும், போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, அரசியல் கட்சிகளும், பல சமூக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து, ஜூலை 26ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முடிவில் மாவட்ட ஆட்சியர் வெளியே வந்து தங்களது மனுவை வாங்க வேண்டுமென வலியுறுத்தினர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டிருந்ததால் ஆட்சியர் பிரகாஷ் வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி தர்ணாவில் ஈடுபட்டு தங்களை மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாகக் கூறி மனுக்களை கலெக்டர் அலுவலகம் முன்பு தீயிட்டு கொளுத்தினர். இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜோயலை சந்தித்தோம்.

‘‘மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக ஆய்வின்படி சுற்றுச்சூழல் மாசு மற்றும் நிலத்தடி நீர் மாசுபாட்டினால் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி, மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு மூலக்காரணமே ஸ்டெர்லைட்தான். நம்ம கரன்ட் பில் கட்டலைன்னா உடனே சர்வீஸை கட் பண்ணிடுவாங்க. ஆனா, இந்த நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளது. மக்களையும் அரசையும் ஏமாற்ற நலத்திட்டங்கள் என்ற பெயரில் மோசடி செய்துள்ளது. தொழிற்சாலையில் வேலைபார்ப்பதில் ஐந்தில் ஒருபகுதி கூட தூத்துக்குடிகாரங்க கிடையாது. எல்லாம் வெளிமாநிலத்தில் இருந்து வேலைக்கு சேக்குறாங்க. எல்லாவகையிலும் மக்களை பாதிக்கிற இந்த ஆலையை அரசு உடனே இழுத்துமூடணும்’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், ‘‘இந்த தொழிற்சாலையை தொடங்குவதற்கு, நாங்கள் கடைசிவரை எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது, யாருடைய அனுமதியும் இல்லாமல் இரண்டாவது ப்ளான்ட் தொடங்கிட்டாங்க. இந்தத் தொழிற்சாலையை அரசு இப்போதே மூட வேண்டும் இல்லையெனில் தூத்துக்குடி ‘போபால்’ ஆக மாறிவிடும்’’ என்றார்.

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழக ஒருங்கிணைப்பாளர் அண்டன் கோமஸிடம் பேசினோம். ‘‘2005&ல் இருந்து 2010 வரைக்கும் 750 கோடி ரூபாய் மோசடின்னு இன்னைக்கு தெரியுது. இதை கண்டுபிடிக்க 5 வருஷம் தேவையா? தெற்கு வீரபாண்டியபுரம், குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் படிப்படியாக மாறிவருகிறது. மாதம் தோறும் 8 முதல் 10 கப்பல்களில் தாமிரத் தாதுக்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகிறது. இதனை முறையில்லாமல் துறைமுகத்தில் இறக்குவதால் கடல் மாசுபட்டு மீன்வளம் பாதிக்கப்படுகிறது’’ என்றார்.

தூத்துக்குடி மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரனிடம் பேசினோம். ‘‘இந்த தொழிற்சாலையிலுள்ள விஷவாயு தாக்கி பலர் மரணமடைஞ்சிருக்காங்க. இந்த விஷயம் வெளிய வந்ததே கிடையாது. ஒரிசாவிலுள்ள நியாம்கிரி மலையை குறைந்த விலைக்கு லீசுக்கு எடுத்து, அங்க இருந்து விலைமதிப்பு மிக்க பாக்சைட் தாதுப் பொருளை, இந்த வேதாந்தா குழுமம்தான் வெட்டி எடுத்துக்கிட்டு இருக்கு. இவங்களுக்கு இடையூறாக உள்ள பழங்குடி மக்களும் அங்கிருந்து துரத்தப்படுகின்றனர். இந்தப் பிரச்னைகள் தற்போது நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிரொலிக்க வேண்டும். மனித உயிரை துச்சமாக மதிக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மோசடிகளை பத்திரிகையாளர்கள்தான் வெளியே கொண்டுவரவேண்டும்’’ என்றார்.

கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்ப-ராயனிடம் பேசினோம். ‘‘இந்த ஆலை தொடங்கினதிலிருந்தே சட்ட விரோதமான காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவர்றாங்க. 2300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி இன்றி ஆலை விரிவாக்கம் செய்தாங்க. இதை எதிர்த்து எங்க அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி இந்த வேலையை தடை செஞ்சிட்டோம். 2004&ல் உச்சநீதிமன்ற கண்காணிப்புக்குழு பரிந்துரைகள் எதையும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை கடைபிடிக்கவில்லை. இதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நடைமுறைபடுத்தவில்லை. இவை அனைத்தும் மத்திய மாநில அரசுகளின் துணையோடுதான் நடைபெறுகிறது. மக்களுக்கு பிச்சை போடுறது போல நலத்திட்டங்களை கொடுக்குறாங்க. வரதராஜனை கைது செய்த கலால் வரி அதிகாரிகளைக்கூட இடமாற்றம் செய்ய வேலை நடந்துகிட்டு இருக்கு’’ என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு பற்றி ஸ்டெர்லைட் நிறுவன செய்தித் தொடர்பாளர் ராஜேஷிடம் கேட்டோம். ‘‘இதுல நாங்க ஏதாவது சொல்லப்போய், அது பெரிதானால் நல்லாவா இருக்கும். இதை அப்படியே விட்டுருவோம்’’ என்றார் பெருந்தன்மையாக(!).

இத்தனை நடந்தும் தூத்துக்குடி மக்கள் பேச்சு மட்டும் வித்தியாசமாக இருந்தது. ‘‘இப்படி எல்லாரும் மல்லுக்கட்டி எதிர்ப்பாங்க. கொஞ்ச நாளைக்கு பின்னாடி, அந்த கம்பெனிக்காரங்க பணத்தை கொடுத்தா, எல்லாரும் சைலன்டா போயிடுவாங்க. இதுவரை நடந்ததும் இதுதான். இனிமேல் நடக்கப் போவதும் இதுதான்’’ என்று வெறுப்பை உமிழ்ந்தார்கள்.

போராட்டக்காரர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்!













பி.எம்.கணேஷ்

மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்

30 Jul 2010 10:18:17 AM IST

நடப்பு ஆண்டில் 1.25 லட்சம் மரக்கன்று நடத் திட்டம்

ராமநாதபுரம், ஜூலை 29: நடப்பு ஆண்டில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நடத் திட்டமிடப்பட்டிருப்பதாக வனத் துறை அமைச்சர் என்.செல்வராஜ் தெரிவித்தார்.
ராமேசுவரம் அருகே குருசடைத்தீவில் பவளப்பாறைகளுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் கப்பா பைகஸ் ஆல்வரேசி என்ற பாசிகள் குறித்து வியாழக்கிழமை அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நாட்டில் வனம், கடல் ஆகிய எந்த பகுதிகளும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை. அவற்றைப் பாதுகாப்பது அந்தந்த மாநிலத்தின் கடமையாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 21 தீவுகளும் கடல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கப்பா பைகஸ் ஆல்வரேசி என்ற கடல்பாசி பவளப்பாறைகளை முற்றிலுமாக ஆக்கிரமித்து அதனை உயிரிழக்கச் செய்து கொண்டிருக்கிறது. கடல் நீரோட்டம் மூலமாக மன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதும் பரவி பவளப்பாறைகளை அழித்து வருகிறது.
இவற்றை விரைவாக அழிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளில் தனியாருக்குச் சொந்தமான காடுகளில் 80,417 ஏக்கரில் ரூ.28.94 லட்சம் செலவில் மரக்கன்றுகளை வைத்திருக்கிறோம்.
இந்த ஆண்டு 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்திருக்கிறோம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் விரைவில் மேம்படுத்தப்படும்.
மீன் வளங்களையும் வன வளங்களையும் பாதுகாப்பதில் வனத் துறை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்றார் அமைச்சர்.
முன்னதாக ராமநாதபுரம் அருகே களிமண்குண்டு கிராமத்தில் மீனவர்களின் குறைகளையும் அமைச்சர் கேட்டறிந்தார்.
குறை கேட்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன், குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், மண்டல வனப் பாதுகாவலர் மல்லேசப்பா, வன உயிரினக் காப்பாளர் சுந்தரக்குமார், நயினார்கோயில் ஒன்றியத் தலைவர் சுப.த.திவாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பால்சாமி, புஷ்பராயர் உள்பட பலரும் அமைச்சரைச் சந்தித்து மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.


© Copyright 2008 Dinamani
Posted by Picasa

Monday, July 26, 2010

எரிகிறது மக்களின் குரல்....

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே ஆர்பாட்டம்



மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில்...



ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே ...



பூட்டப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்..



பூட்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடரும் ஆர்பாட்டம்....





காவல்துறையினரின் பேச்சுவார்த்தை...





அப்போ பூட்டும் பூட்டிரவா?.............



தீ வைத்து கொளுத்தப்படும் மனு..



எரிகிறது மக்களின் குரல்....


மத்திய, மாநில அரசினை ஏமாற்றி மக்களின் வாழ்வாதாரத்தினை சீர் குலைக்கும் ஸ்டெர்லைட்தொழிற்சாலையினை நிரந்தரமாக இழுத்து மூடக்கோரி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. தூத்துக்குடியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுநல அமைப்பைச் சேர்ந்த 100 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
நாம் தமிழர் இயக்கம் வழக்கறிஞர்.பிரபு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வழக்கறிஞர்.ஜோயல், கடலோர மக்கள் கூட்டமைப்பு புஷ்பராயன், வீராங்கனை அமைப்பு பாத்திமாபாபு, பெரியார் திராவிடர் கழகம் பால்.பிரபாகரன், மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர்.ராமசந்திரன், கிறித்துவ வாழ்வுரிமை இயக்கம் சுந்தரிமைந்தன், தமிழக மக்கள் உரிமை கூட்டமைப்பு தமிழ்ச்செல்வன், சமூக செயல்பாட்டு இயக்கம் பிரபாகர், இந்திய பொதுவுடைமை கட்சி வழக்கறிஞர்.மோகன்ராஜ், மக்கள் உரிமை குழு வழக்கறிஞர்.அதிசயகுமார், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சற்குணம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சந்தனகுமார், பகுஜன் சாமாஜ் கட்சி ஜீவன்குமார், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் நடராஜ், புரட்சிகர இளைஞர் முன்னணி சுஜித், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, மானிட வலிமைக்கான வழிகாட்டி மையம் அசுந்தா, வடபாகம் நாட்டுப் படகு மீனவ சங்கம் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் மனுவினை நேரிடையாக வந்து வாங்கி செல்லுமாறு போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் வர மறுத்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்பாட்டத்தில் ஈட்டுபட்டனர். இரண்டு மணி நேரமாக ஆட்சியர் தரப்பில் எவ்வித பதிலும் இல்லாததால் மனுவை தீயிட்டு கொளுத்தி விட்டு போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.

அனுப்புனர்,
தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு,
பாலன் இல்லம், போல்டன்புரம், தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம்.

பெறுனர்,
திருமிகு. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
தூத்துக்குடி மாவட்டம்.

மதிப்புமிகு ஐயா,
(பொருள் : மத்திய, மாநில அரசினை ஏமாற்றி மக்களின் வாழ்வாதாரத்தினை சீர் குலைக்கும்
ஸ்டெர்லைட்தொழிற்சாலையினை நிரந்தரமாக இழுத்து மூடக்கோரி )

வணக்கம் ! தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் என்ற தொழிற்சாலையினால் தூத்துக்குடியின் சுற்று சூழல் பெருமளவில் மாசுபட்டு வருகின்றது. ஆலையின் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயமும், மீன்வளமும் பாழ்பட்டு வருகின்றது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதோடு, விவசாய நிலங்களையும் சீர்கேடு அடையச செய்து வருகின்றனர். மக்களின் நிலங்கள் வேலைவாய்ப்பு என்ற பெயரில் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. துறைமுகம் சார்ந்த ஏற்றுமதி இறக்குமதியிலும் பல்வேறு மோசடிகளை செய்து வந்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர கம்பெனியில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக மத்திய கலால் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். டிவின்ச்டர் என்ற ஸ்டெர்லைட் சார்பு நிறுவனம் 208 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் 25 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் என்ற துணை நிறுவனம் 2005ம் ஆண்டில் 220 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக 84 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 2010ம் ஆண்டின் ஸ்டெர்லைட் தொழிற்சாலை ஆண்டறிக்கை ஆய்வின் படி மறைமுக வரி 348 மில்லியன் டாலர் கட்ட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் மட்டும் இரண்டாயிரம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக தொழிற்சாலையின் மறைமுக வரி உதவித் தலைவர் எஸ்.வி.ஆர்.என்ற வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். கலால் வரித்துறையினர் ஸ்டெர்லைட் தொழிற்சாலை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தற்போது ஒரு வழக்கில் மட்டும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் துணைத் தலைவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு தெரியாமல் பல ஆயிரம் கோடி மோசடி நடைபெற்றுள்ளது. எனவே தொழிற்சாலையின் உயர் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள், பங்குதாரர்கள் என அனைவரும் மத்திய புலனாய்வு துறையினரால் விசாரிக்கப்பட வேண்டும். வரி ஏய்ப்பு செய்துள்ள ஆலை மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, இயற்கை வளங்களை சுரண்டி, தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையினை அரசு தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பலகோடி ருபாய் மின்சார கட்டணம் பாக்கி வைத்துள்ளனர். மக்களையும், அரசையும் ஏமாற்ற நலத்திட்டங்கள் என்ற பெயரில் மோசடி செய்து வருகின்றனர். அரசுக்கு முறைப்படி வரி கட்டாமல், சில கோடி ரூபாய்கள் அரசு திட்டங்களுக்கு வழங்குவதாக போலித்தனமான விசயங்களை செய்து வருகின்றனர்.
அரசின் அனுமதி பெறாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை தனது விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தியுள்ளதோடு, கட்டிடங்கள் கட்டுவது, மூலப் பொருட்கள், தளவாட சாமான்கள் வாங்குவது என அரசை ஏமாற்றி வருகின்றனர். சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் இந்த தொழிற்சாலை அரசின் விதிமுறைகளுக்கு மாறாக, தனதுஆலை விரிவாக்கப் பணியினை செய்ய கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
தாமிரபரணியில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே குழாய் மூலம் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும்.
தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது. மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளதால் இத்தொழிற்சாலை தடை செய்யப்பட வேண்டியதாகும்.
ஆலையின் கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் செயலாகும். கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். இத்தொழிற்சாலையால் தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை ஆகும்.
2004 ல் உச்ச நீதி மன்ற கண்காணிப்பு குழு பரிந்துரைகள் எதையும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையும் கடைப்பிடிக்கவில்லை அரசும் கண்காணிப்பு செய்யவில்லை. குறிப்பாக துறைமுகத்தில் தாமிர இறக்குமதிக்காக தனித் தளம் அமைக்கப்பட்டு இறக்கப்பட வேண்டும் என்பதை பின்பற்றாமல் கடலிலேயே தனது சூழல் சீர்கேட்டை ஆரம்பித்து விடுகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து முறைகேடாக மூலப்பொருள் இறக்குமதி செய்வதோடு உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்து வருகின்றனர்.
தொழிற்சாலையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் பேரிடர் பாதுகாப்பு மற்றும் முன் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் செய்யவில்லை. தொழிற்சாலையின் உள்ளே அடிக்கடி மர்ம மரணங்கள் நிகழ்வதும், விபத்துகள் நடப்பதுவும் மூடி மறைக்கப்படுகின்றது. வேலை வாய்ப்பு என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் மத்திய, மாநில அரசுகளை வரி ஏய்ப்பு மூலம் மோசடி செய்த, தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தினை சீர் குலைக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையினை நிரந்தரமாக இழுத்து மூட உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவண்
தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டக் குழு சார்பாக,



--
.

கப்பாபைகஸ் பாசியை மன்னார் வளைகுடா பகுதியில் பரவச் செய்தோரைக் கண்டறிந்து,​​ அவர்கள் மீது 1972-இந்திய வன விலங்கு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்



26 Jul 2010 10:49:18 AM IST

மன்னார் வளைகுடா கடல்வளம் பாதிக்கப்படும் அபாயம்
தூத்துக்குடி,​​ ஜூலை 25:​ மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பெரும் களையாக உருவெடுத்து வருகிறது,​​ "கப்பாபைகஸ் ஆல்வரேசி' என்ற வெளிநாட்டுக் கடல்பாசி.​ ​
​ ​ கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாக விளங்கும் பவளப்பாறைகளை,​​ இக் கடல்பாசி கொஞ்சம்கொஞ்சமாக அழித்து வருகிறது.​ ​
​ ​ இக் கடல்பாசிகளை உடனே அகற்றாவிட்டால்,​​ மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைப் படுகைகள் பாலைவனமாக மாறி,​​ கடல்வளம் பாதிக்கப்படும் என ஆராய்ச்சியாளர்களும்,​​ சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துள்ளனர்.
​ ​ மன்னார் வளைகுடா,​​ நாட்டின் நான்கு முக்கிய பவளப்பாறை உள்ள இடங்களுள் ஒன்று.​ இதன் முக்கிய பவளப்பாறைப் படுகைகள் இங்குள்ள 21 தீவுகளையும் சுற்றி அமைந்துள்ளன.​ இவை 1986-ம் ஆண்டு கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
​ ​ ​ "குழி மெல்லுடலிகள்' எனப்படும் பவளப்பாறைகள் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு,​​ குறிப்பாக மீன் இனங்களுக்கு வாழ ஏற்ற சூழ்நிலையைத் தருகிறது.​ கடல்வாழ் உயிரினங்களுக்கு முக்கிய உறைவிடமாகவும்,​​ உணவு,​​ இனப் பெருக்கத்துக்கு ஏற்ற இடமாகவும் பவளப்பாறைகள் திகழ்கின்றன.​ எனவே,​​ இவற்றை ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாரம்பரியமாக சார்ந்துள்ளனர்.
​ ​ ​ ​ அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாகத் திகழும் இப் பவளப்பாறைகளுக்கு,​​ கடல்பாசி வடிவில் புதிய ஆபத்து வந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
​ ​ ​ பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து 1995-ல் கொண்டுவரப்பட்ட கப்பாபைகஸ் ஆல்வரேசி ​(ஓஹல்ல்ஹல்ஹட்ஹ்ஸ்ரீன்ள்​ ஹப்ஸ்ஹழ்ங்க்ஷ்ண்ண்)​ எனப்படும் கடல்பாசி,​​ மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் உள்ள பவளப்பாறைகளை கொஞ்சம்கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது.​ வேதிப் பொருளான கெராஜின் போன்றவை தயாரிக்க,​​ கடலில் இப் பாசியை தனியார் தொழில் நிறுவனங்கள் வளர்த்து வருகின்றன.​ இப் பாசிகள் பவளப்பாறைகளின் மீது படர்ந்து,​​ அவற்றை முற்றிலுமாக மூடி,​​ ஒளிச்சேர்க்கை நடைபெறவிடாமல் தடுத்து அழித்துவிடும்.​ ​
​ ​ மன்னார் வளைகுடாவில் நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில் சிங்கிள்,​​ குருசடை மற்றும் பூமரிச்சான் ஆகிய 3 தீவுகளில் உள்ள பவளப்பாறைகளை இப் பாசிகள் ஆக்கிரமித்து,​​ பரவி அவற்றை உயிரிழக்கச் செய்து கொண்டிருக்கின்றன.​ ​
​ ​ கடந்த 18 மாதங்களில் சுமார் 1 ச.கி.மீ.​ அளவுக்கு பவளப்பாறை இடங்களில்,​​ இப் பாசி பெருகி 480-க்கும் மேலான பவளப்பாறை காலனிகளைப் பாதித்து அழித்துள்ளது என்றார்,​​ மன்னார் வளைகுடா பகுதியில் 10 ஆண்டுகளாக பவளப்பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர்,​​ ஜே.கே.​ பேட்டர்சன் எட்வர்டு.
​ ​ ​ இக் கடல்பாசி,​​ வேகமாக வளரக்கூடிய,​​ தடிமனான,​​ சக்திவாய்ந்த சிவப்புப் பாசி வகை.​ 15 முதல் 30 நாள்களில் இருமடங்காக வளரும் தன்மை கொண்டது.​ இது பவளப்பாறை அதிகம் உள்ள இடங்களை பாசி அதிகமுள்ள இடங்களாக மாற்றி,​​ பவளப்பாறை இடங்களின் வடிவமைப்பை மாற்றி அவற்றின் துளைகள்,​​ பிளவுகள் போன்றவற்றைக் குறைத்து விடுகின்றன.
​ ​ ​ இதனால்,​​ இந்த பவளப்பாறைகளை நம்பி வாழும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு,​​ அதனால் மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
​ உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்நிலை நீடித்தால்,​​ மன்னார் வளைகுடாவின் பவளப்பாறை இடங்கள் பாலைவனம்போல மாற நேரிடும்​ என்றும் அவர் குறிப்பிட்டார்.
​ ​ ​ இது குறித்து,​​ சுற்றுச்சூழல் ஆர்வலரும்,​​ கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளருமான ம.​ புஷ்பராயன் கூறுகையில்,​​ பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தியாவின் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் கப்பாபைகஸ் பாசியை மன்னார் வளைகுடா பகுதியில் பரவச் செய்தோரைக் கண்டறிந்து,​​ அவர்கள் மீது 1972-இந்திய வன விலங்கு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
​ ​ இது தொடர்பாக,​​ மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்கா வன உயிரினக் காப்பாளர்
என்.​ சுந்தரகுமாரிடம் கேட்டபோது,​​ மன்னார் வளைகுடா பகுதியில் பெரும் ஆபத்தாக கப்பாபைகஸ் ஆல்வேசி பாசி பரவி வருகிறது.
​ ​ பவளப்பாறைகளை அழித்து வரும் இப் பாசிகளை கடலில் இருந்து அப்புறப்படுத்த வனத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.​
இது தொடர்பாக நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு வகை உதவிகள் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.​ மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் அதற்கான பணிகள் விரைவாக நடைபெறும் என்றார் அவர்.

© Copyright 2008 Dinamani

Sunday, July 25, 2010

மன்னார் வளைகுடா கடல் தீவுகளில் எரியும் கீரி செடி: மலராமல் கருகும் பூக்கள்

ராமநாதபுரம் : மன்னார்வளைகுடா கடல் தீவுகளில், எரியும் தன்மை கொண்ட கீரிசெடிகளின் பூக்கள் மலராமல் கருகிவருகின்றன. இதற்கான காரணம் புரியாமல், வனத்துறையினரும் குழப்பத்தில் உள்ளனர்.

மன்னார் வளைகுடா கடல் தீவுகளில் காணப்படும் அரிய வகை தாவரங்களில் "கீரி' செடியும் ஒன்று . இவை பூத்திருக்கும் போது, தூரத்திலிருந்து பார்த்தால், கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல காட்சியளிக்கும். பார்வைக்கு மட்டுமின்றி, இவற்றின் படைப்பும் எரியும் தன்மை கொண்டது தான். பச்சை செடியில், தீ மூட்டினால் பற்றி எரியும் இவற்றுக்கு, அதன் மலர்களே பலம். கீரி செடிகள் பருவ மழை காலத்தில், பூக்கும் தன்மை கொண்டவை. இவை, காய் ஈட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காற்றின் உவர்ப்பு தன்மை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு இயற்கை காரணங்கள் கூறப்படுகிறது. இருப்பினும், மற்ற தாவரங்களை விட எதையும் தாங்கி வளரும் தன்மை இதற்கு உண்டு. உவர்ப்பு காற்றால் அனைத்து தாவரங்களும் கருகி வரும் நிலையில், கீரி செடிகள் மட்டும் செழித்து வளர்ந்துள்ளதே இதற்கு சாட்சி. இருந்தும் பூக்கள் மட்டும் மலராமல், கருகி உதிர்ந்து வருகின்றன. மர்ம நோய் தாக்குதல் ஏதேனும், கீரி செடியை பாதித்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவை உறுதி செய்யப்படாத நிலையில் , இந்நிலைக்கான காரணத்தை அறிய முடியாமல், வனத்துறையினரும் குழப்பத்தில் உள்ளனர். முறையாக சோதனை செய்து, இச்செடியின் பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
Posted by Picasa

Friday, July 23, 2010

குருசடைத் தீவில் வனத்துறை அதிகாரிகளுடன்ஆட்சியர் ஆய்வு

23 Jul 2010 01:37:35 PM IST

குருசடைத் தீவில் வனத்துறை அதிகாரிகளுடன்ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம், ஜூலை 22: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் புகழிடமாக விளங்கும் உயிருள்ள பவளப் பாறைகளை, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக் கொன்றுவரும் கப்பா பைகஸ் ஆல்வரேசி எனப்படும் வெளிநாட்டு கடல்பாசிகளை அழிக்க, வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக, ராமேசுவரம் தீவு பாம்பன் குந்துகால் அருகே குருசடைத்தீவில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், மாவட்ட வருவாய் அதிகாரி கி. பாலசுப்பிரமணியம், திட்ட இயக்குநர் ஆனந்தராஜ், வன உயிரின பாதுகாவலர் சுந்தரக்குமார், உதவி வனக் காப்பாளர் வீரபத்திரன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் பேட்டரிசன் உள்பட உயர் அதிகாரிகள் பலரும் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
குழி மெல்லுடலிகள் எனப்படும் பவளப்பாறைகள் மன்னார் வளைகுடாவில் அதிக அளவில் உள்ளன. மிருதுவான இவ்வுயிரினங்கள், அரிய வகை மீன்கள், தாவரங்கள், 700 வகையான பவள உயிரிகள் போன்றவற்றின் உறைவிடமாகவும், இனப் பெருக்கத்துக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கின்றன. மேலும், கடலில் வசிக்கும் பாலூட்டி வகைகளான கடல் பசு, திமிங்கலங்கள், டால்பின்கள் போன்ற விலங்குகள் வாழ்வதற்கும் இவை பெரிதும் உதவியாக இருக்கின்றன.
அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் புகழிடமாகத் திகழும் மன்னார் வளைகுடாவில் உள்ள இந்த பவளப் பாறைகளுக்கு, தற்போது ஒரு ஆபத்து வந்துள்ளதை வனத்துறை அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 1995-ல் இறக்குமதி செய்யப்பட்ட கப்பாபைகஸ் ஆல்வரேசி எனப்படும் கடல்பாசி, மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் உள்ள பவளப் பாறைகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கின்றன. வேதிப் பொருள்களான வினீகர், அகார் அகார், கெராஜின் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்காக, கடலில் இந்தப் பாசியை தனியார் தொழில் நிறுவனங்கள் வளர்த்து வருகின்றன. ஆனால், இந்தப் பாசிகள் பவளப்பாறைகளுக்கு தீங்காகி வருகின்றன. இவை, குருசடைத்தீவு, சிங்கில் தீவு, பூமரிச்சான் தீவுகளில் உள்ள பவளப்பாறைகளைமுற்றிலுமாக ஆக்கிரமித்து, அவற்றை உயிரிழக்கச் செய்து கொண்டிருக்கின்றன. எனவே, இவற்றை முற்றிலுமாக அப்புறப்படுத்தி, பவளப்பாறைகளையும், கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி குருசடைத் தீவில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், வன உயிரின பாதுகாவலர் சுந்தரக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கப்பா பைகஸ் ஆல்வரேசி என்பது, தனியார்களால் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தொழிலுக்காக கடலில் வளர்க்கப்பட்டு வரும் ஒரு பாசி இனம். கடலில் 150 வகையான பாசிகள் இருந்தாலும், அவை அனைத்தும் பவளப்பாறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவே இருக்கின்றன. ஆனால், இந்த கப்பா பைகஸ் ஆல்வரேசி மட்டும் பவளப்பாறைகளின் மீது படர்ந்து, அவற்றை முற்றிலுமாக மூடி உயிரோடு அழித்துக் கொன்று விடுகின்றன. பவளப்பாறைகள் குறித்து வேறு சில ஆராய்ச்சிகள் மேற்கொண்ட போதுதான் இப்பாசி பவளப்பாறைகளை அழித்துக் கொண்டிருப்பதை பற்றி அறிய முடிந்தது. இப்பாசி ரப்பர் போல இருப்பதால், மீன்கள் இவற்றை சாப்பிட்டாலும் மெல்ல முடியாமல் போட்டுவிடுகின்றன.
அமெரிக்காவில் ஹவாய் தீவில் கெனோகி வளைகுடா பகுதியில் இப்பாசிகள்அதிகமாக வளர்ந்து, அவற்றால் பெரும்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், தற்போது இவற்றை அதிக செலவு செய்து கடலில் இருந்து அப்புறப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதே நிலை, மன்னார் வளைகுடா கடல் பகுதி பவளப்பாறைகளுக்கும் வந்து விடக்கூடாது என முடிவெடுத்து, அவற்றை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடலில் மூழ்கி நீச்சல் தெரிந்தவர்கள் மூலமே இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க முடியும்.
அவ்வாறு அப்புறப்படுத்தும்போது, பவளப்பாறைகளுக்கும் எந்தவித சேதமும் ஏற்படாதவாறு, இப்பாசிகளை அழிக்க வேண்டும். தற்போது, இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை துவக்கியுள்ளோம். விரைவில் இவற்றைப் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சுனாமி போன்ற கடல் அலைகளின் சீற்றத்தின்போது, பவளப்பாறைகள் இருந்தததால்தான், பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. இதற்காகவும், பவளப்பாறைகளை பாதுகாப்பது அவசியமாகிறது என, அவர்கள் தெரிவித்தனர்.


© Copyright 2008 Dinamani

Thursday, July 22, 2010

 
Posted by Picasa
 
Posted by Picasa

மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பூங்கா அழிவிற்கு துணைபோன ஆராய்ச்சியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


கடலோர மக்கள் கூட்டமைப்பு

----------------------------------------------------------------------------------------------------------------------------------

மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பூங்கா அழிவிற்கு

துணைபோன ஆராய்ச்சியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்



மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடல் பாசிகள்-150, கடல்புற்கள்-13, சதுப்பு நிலத் தாவரங்கள்-14, பவள உயிரிகள்-137, முத்துச்சிப்பி வகைகள்-11, வண்ண மீன்கள்-245, கடல் ஆமைகள்- 5, திமிங்கிலங்கள்-6, டால்பின்கள்-4 என மொத்தத்தில் 3,600 வகையிலான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. எனவே, இந்த உயிரினங்கள் வாழும் பகுதியை மத்திய அரசு கடந்த 1986-ல் கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவித்து, அதனைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மன்னார் வளைகுடாவுக்கு உள்பட்ட கீழக்கரை, ஏர்வாடி, பெரியபட்டணம், முத்துப்பேட்டை, முந்தல், வாலிநோக்கம் ஆகிய கடல் பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கடல் பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பாரம்பரிய , இயற்கை முறையில் வளரும் பாசிகளை சேகரம் செய்து மீனவ பெண்கள் தங்களது வருமானத்தினை ஈட்டி வருகின்றனர்.

ஆனால், சில ஆராய்சியாளர்களின் உதவியால் சூழலுக்கு எதிரான செயற்கை முறையிலான பாசி வளர்ப்பு எனவும் அதிக வருமானம் கிடைப்பதாகவும் கூறி கப்பாபைகஸ் என்ற கடல்பாசி வளர்க்கப்பட்டு வருகின்றது. இது சுற்று சூழலுக்கு பெரும் ஆபத்தினை ஏற்படுத்தி வருகின்றது. தீவுகளில் வனத்துறையினர் கண்காணிப்பு செய்கையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் "கப்பாபைகஸ் ஆல்வரேசி' ‘kappaphycus alverizi’ (Enchaema Cottonii) என்ற கடல்பாசி பவளப் பாறைகளை மூடியிருப்பது தெரிய வந்தது. "ரப்பர்' போன்ற தன்மை கொண்ட இப்பாசிகள் பவளங்களில் படிந்து அவற்றின் சுவாசத்தை தடுத்து நிறுத்துகின்றன. இதனால் பவளப் பாறைகள் அழிவை சந்திக்கிறது.

கடந்த 1995ல், பிலிப்பைன்சியை சேர்ந்த குளிர்பான நிறுவனம் ஒன்று இந்த பாசியை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது. இதை பவளப்பாறைகள் இல்லாத பாக்ஜல சந்தி கடற்பகுதியில் மீனவர்களை வளர்க்க செய்துள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமனாதபுரத்தினை சேர்ந்த அக்வாகல்சர் பவுண்டேசன் ஆப் இந்தியா (Aquaculture Foundation of India) உள்ளிட்ட சில தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களும், பேராசிரியர்கள் சிலரும் இதன் பின்னணியில் உள்ளனர். இதற்கு உதவி செய்துவருகின்றன.

செயற்கை பாசி வளர்ப்பு மூலம் சில நிறுவனங்களும், இடைத்தரகர்களும் பயன் பெற்று வருகின்றனர். பவளப் பாறைகள் அதிகம் கொண்ட மன்னார் வளைகுடாவில் இவற்றை வளர்க்க சாத்தியம் இல்லை என்ற நிலையிலும், பாக்ஜல சந்தியிலிருந்து கடல் வழியாக ஊடுருவிய "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பாசிகள் மன்னார் வளைகுடாவிலும் பரவி உள்ளது. தற்போது மன்னார் வளைகுடாவின் சிங்கிள், குருசடை, பூமரிச்சான் தீவுகளில் முற்றிலும் ஆக்கிரமித்துள்ள இப்பாசிகள், எஞ்சியுள்ள 18 தீவுகளிலும் விட்டு வைக்காது என்ற கவலை தற்போது எழுந்துள்ளது.

இப்பாசியால், பவளப் பாறைகள் பாதிக்கப்படுவதால், புவி வெப்பமடைவது தவிர்க்க முடியாததாகி விடும். அதே நேரத்தில் பேரலை, கடல் அதிர்வுகளை சமாளிக்கும் தன்மையை பவளப் பாறைகள் இழக்கும். இதனால் மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய உயிரினங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் கடலோர காவல் படை அலுவலகம் அருகில் இந்த வகை பாசி வளர்க்கப்பட்டு வருகின்றது. தற்போது மன்னார் வளைகுடாவில் முத்தையாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கடல் பகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியிலும் செயற்கை பாசி வளர்ப்பிற்கான முயற்சிகள் சில தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் நடைபெற்று வருகின்றது. இது கடல் வளத்தினையும், பல்லுயிர் சூழலினையும் பாதிப்பதோடு, மீனவ மக்களின் தொழில் பாதிப்பையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தீவுகளும், பாசிகளும், கடல் வாழ் உயிரினங்களும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் அழிந்து வருகின்றது. தூத்துக்குடி மண்டலத்திலுள்ள தீவுகள்தான் ஆபத்தான அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த வேளையில் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள் சுற்று சூழலை மாசுபடுத்தும் தொலிற்சாலைகளோடு கூட்டு வைத்து கொண்டு, அரசுக்கு தவறான தகவல்கள் கொடுத்து வருவதோடு மீனவ மக்களுக்கும், கடல் சூழலுக்கும் எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். செயற்கை பாசி வளர்ப்பு முறையினை அரசு தடுக்க வேண்டும். இயற்கையான பாசிகள், கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்காமல் இருக்க தொழிற்சாலை கழிவுகளும், பக்கிள் ஓடை உள்ளிட்ட நகர கழிவுகளும் கடலில் கலக்காமல் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லுயிர் சூழலுக்கு ஏற்படும் பேரிடர் தடுக்கப்பட வேண்டும்.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்வோர் மீது, பாதிப்பு என தெரிந்தே மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பூங்கா அழிவிற்கு துணைபோன ஆராய்ச்சியாளர்கள் மீது, கப்பாபைகஸ் பாசியினை மன்னார் வளைகுடா பகுதியில் பரவ செய்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது 1972-இந்திய வன விலங்கு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மிக அருகில், கடலில் ஊடுருவும் வகையில் பாசி வளர்ப்பிற்கு அனுமதித்த அதிகாரிகள் கண்டறியப்பட வேண்டும். இதுவரை அதனை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



ம.புஷ்பராயன், 9842154073

அமைப்பாளர், கடலோர மக்கள் கூட்டமைப்பு.

Coastal People's Federation-CPF

கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவில் விரைவில் ஒளிரும் மிதவை வேலிகள்: மாவட்ட ஆட்சியர் தகவல்

22 Jul 2010 10:26:01 AM IST

கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவில் விரைவில் ஒளிரும் மிதவை வேலிகள்: மாவட்ட ஆட்சியர் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 21: ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 சிறு பவளப்பாறைத் தீவுகளைப் பாதுகாக்கும் வகையிலும் மீனவர்களின் வாழ்வுரிமை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையிலும் கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவுக்கு ஒளிரும் மிதவை வேலிகள் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் புதன்கிழமை தெரிவித்தார்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளையும் 4 மண்டலங்களாகப் பிரித்து, கீழக்கரை, மண்டபம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து தலா 7 தீவுகளும் சாயல்குடி அருகே வேம்பாரை மையமாக வைத்து 4 தீவுகளும், தூத்துக்குடியை மையமாக வைத்து 3 தீவுகளுமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தீவுகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்பேரில், ரூ. 2 கோடி மதிப்பில் தீவுகளைச் சுற்றி கடலில் ஒளிரும் மிதவை வேலிகளை விரைவில்
வனத் துறை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இத் தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கடல் பாசிகள்-150, கடல்புற்கள்-13, சதுப்பு நிலத் தாவரங்கள்-14, பவள உயிரிகள்-137, முத்துச்சிப்பி வகைகள்-11, வண்ண மீன்கள்-245, கடல் ஆமைகள்- 5, திமிங்கிலங்கள்-6, டால்பின்கள்-4 என மொத்தத்தில் 3,600 வகையிலான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்த உயிரினங்கள் வாழும் பகுதியை மத்திய அரசு கடந்த 1986-ல் கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவித்து, அதனைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இத் தேசியப் பூங்காவைப் பாதுகாக்கவும், அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் மேலும் அழிந்து விடாமல் பாதுகாக்கவும் 21 தீவுகளையும் சுற்றி ஒளிரும் மிதவை வேலிகளை கடலில் மிதக்க விட மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து, அதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு தீவிலிருந்தும் 500 மீ. சுற்றளவுக்கு ஆழம் குறைந்த கடல் பகுதியில் மிதவை வேலி போடப்படும். கடலில் மிதக்கும் மிதவை ஒன்றின் எடை 30 கிலோவாகவும் அதே மிதவைக்கு அடியில் இருக்கும் சிமெண்ட் கல் ஒன்றின் எடை 350 கிலோவாகவும் இருக்கும். இரண்டுக்கும் இடையில் துருப்பிடிக்காத இரும்புச் சங்கிலி இணைக்கப்பட்டிருக்கும். ஒரு மிதவை ஒன்றின் விலை ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் மொத்தம் 500 மிதவைகள் ரூ. 1.50 கோடி மதிப்பிலும் தயாரிக்கப்படவுள்ளது. மொத்தத்தில் ரூ. 2 கோடி மதிப்பில் 21 தீவுகளையும் சுற்றி ஒளிரும் மிதவை வேலிகள் அமைக்கப்படும்.
ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதி 10,500 சதுர கி.மீ. இதில் 560 சதுர கி.மீ மட்டும் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டு, தற்போது அதைச் சுற்றி மட்டுமே மிதவை வேலிகள் அமைக்கப்படுகின்றன. மிதவை வேலிகளால் தேசியப் பூங்காவின் எல்லைதான் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர, மீனவர்களின் வாழ்வுரிமை எந்த வகையிலும் பாதிக்காத வகையில்தான் வேலிகள் அமைக்கப்படுகின்றன. அட்ச ரேகை, கடக ரேகை ஆகியனவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கடலில் வேலிகள் நிர்மாணிக்கப்படும். ஒளிரும் மிதவை வேலிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மீனவர்கள் வழக்கம் போலவே போய் வரலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால், தடை செய்யப்பட்ட உயிரினங்களைப் பிடித்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கி. பாலசுப்பிரமணியம், வன உயிரின பாதுகாவலர் சுந்தரக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆனந்தராஜ், தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேட்டரிசன், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் செந்தில்குமார், வனச் சரகர்கள் ராஜேந்திரன், திலகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

© Copyright 2008 Dinamani
ராமநாதபுரம் : பிலிப்பைன்ஸ் நாட்டின் பாசிகள் கடல் வழியாக, மன்னார் வளைகுடாவில் ஊடுருவியது தெரிய வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மன்னார் வளைகுடாவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம், குருசடை தீவில் நேற்று நடந்தது. கலெக்டர் ஹரிஹரன், மன்னார் வன உயிரின காப்பாளர் சுந்தரக்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவு முழுவதையும் சுற்றிப் பார்த்தனர். ஆய்வுக்காக தீவையொட்டிய பகுதியில் பவளப் பாறைகள் சேகரிக்கப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டது. இதில், பிலிப்பைன்ஸ் நாட்டின் "கப்பாபைகஸ் ஆல்வரேசி' என்ற கடல்பாசி பவளப் பாறைகளை மூடியிருப்பது தெரிய வந்தது. "ரப்பர்' போன்ற தன்மை கொண்ட இப்பாசிகள் பவளங்களில் படிந்து அவற்றின் சுவாசத்தை தடுத்து நிறுத்துகின்றன. இதனால் பவளப் பாறைகள் அழிவை சந்திக்கிறது.

கடந்த 1995ல், பிலிப்பைன்சியை சேர்ந்த குளிர்பான நிறுவனம் ஒன்று இந்த பாசியை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது. இதை பவளப்பாறைகள் இல்லாத பாக்ஜல சந்தி கடற்பகுதியில் மீனவர்களை வளர்க்க செய்துள்ளது. இதன் மூலம் சில நிறுவனங்களும், இடைத்தரகர்களும் பயன் பெற்று வருகின்றனர். பவளப் பாறைகள் அதிகம் கொண்ட மன்னார் வளைகுடாவில் இவற்றை வளர்க்க சாத்தியம் இல்லை என்ற நிலையிலும், பாக்ஜல சந்தியிலிருந்து கடல் வழியாக ஊடுருவிய "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பாசிகள் மன்னார் வளைகுடாவிலும் பரவி உள்ளது. தற்போது மன்னார் வளைகுடாவின் சிங்கிள், குருசடை, பூமரிச்சான் தீவுகளில் முற்றிலும் ஆக்கிரமித்துள்ள இப்பாசிகள், எஞ்சியுள்ள 18 தீவுகளிலும் விட்டு வைக்காது என்ற கவலை தற்போது எழுந்துள்ளது. இப்பாசியால், பவளப் பாறைகள் பாதிக்கப்படுவதால், புவி வெப்பமடைவது தவிர்க்க முடியாததாகி விடும். அதே நேரத்தில் பேரலை, கடல் அதிர்வுகளை சமாளிக்கும் தன்மையை பவளப் பாறைகள் இழக்கும். இதனால் பாதிப்பு தமிழகத்திற்கு தான்.
 
Posted by Picasa
 
Posted by Picasa
 
Posted by Picasa