Wednesday, May 11, 2011

அனல்மின் நிலைய விரிவாக்கம் மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

அனல்மின் நிலைய விரிவாக்கம் மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

வேல்குமார் | செவ்வாய் 3, மே 2011 6:30:57 PM (IST)


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சங்கு கூட்ட அறையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், ஓட்டப்பிடாரம் தாலுகா மேலமருதூர் கிராமத்தில் அமைய இருக்கும் 1600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் குறித்த மக்கள் கருத்துகேட்பு கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார்.

மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க இருக்கும் கோஸ்டல் எனர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர், தாங்கள் அமைக்க உத்தேசித்துள்ள 2ம் கட்ட 1600 மெகாவாட் அனல்மின் திட்டம் சூப்பர் கிரிட்டிக்கல் தொழிற்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட அனல்மின் திட்டம் நிலக்கரியின் தேவை 5 விழுக்காடுகளுக்கும் அதிகமாக குறைக்கப்பட்டு, கரி அமில வாயுவின் வெளிப்படுத்துதல் வெகுவாக குறைக்கப்படும்.

275 லிட்டர் உயரம் கொண்ட புகை போக்கியும், 99.9 விழுக்காடு திறன் கொண்ட மின்நிலை வெளிப்பாடு கொண்டு நிறுவப்படுவதால், புகை போக்கி வழியாக வெளியேற்றப்படும் புகையின் மாசு மிக குறைவாகவே இருக்கும்.

இத்திட்டத்தின் நிலப்பரப்பில் 350 ஏக்கர் ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக , 65 ஆயிரம் மரங்கள் கொண்ட பசுமை பரப்பு அமைக்கப்படுகிறது என்றும், இத்திட்டம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் உள்கட்ட அமைப்பு, அடிப்படை வசதிகளை மேலமருதூர் மற்றும் அதைசுற்றியுள்ள கிராமங்களில் மேம்படுத்தும். வர்த்தகம், போக்குவரத்து, துணை தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் இப்பகுதியில் அதிகரிக்கும் என படகாட்சி மூலம் விளக்கி கூறினர்.

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு, தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக சங்கம், தூத்துக்குடி சிறுதொழில் சங்கம், சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கம், இந்திய கம்யூ.கட்சி, மா.கம்யூ.கட்சி, புதிய தமிழகம் கட்சி, மீனவர் அமைப்பினர், மேலமருதூர் அதைச்சுற்றியுள்ள கிராம மக்கள் கூட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

நாட்டில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை போக்குவதற்கு இம்மாதிரி மின் உற்பத்தி நிலையங்கள் வரவேண்டும் என்று தொழில் வர்த்தக சங்கத்தை சேர்ந்த ஜோ வில்லவராயர், ராஜா சங்கரலிங்கம், ஜெயராயன், நேரு பிரகாஷ் ஆகியோர் பேசினர்.

இத்தொழிற்சாலையால், சுற்றுசூழல் மாசுபடும். உப்பளங்கள், மீனவர் வாழ்வாதாரங்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் பாதிக்கப்படும் என்று சிபிஎம் மாவட்ட செயலாளர் கனகராஜ், சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் கனகராஜ், கடலோர மக்கள் கூட்டமைப்பு புஷ்பராயன் உள்பட பலர் பேசினர்.

கூட்டம் தொடங்கியதும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைகளை மீறி கூட்டம் நடத்தப்படுவதாக, புகார்கள் எழும்பியது. அதற்கு பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், தேர்தல் கமிஷனின் அனுமதியின் பேரில் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது என்றும், கடந்த 18.03.2011 நடைபெற வேண்டிய இந்த கூட்டம் தேர்தல் அலுவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இக்கூட்டம் குறித்த விளம்பரம், 2.4.2011 தினசரிகளில் வெளியிடப்பட்டது எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment