ராமேஸ்வரம் : நடுக்கடலில் ஏற்படும் படகு விபத்து குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், கோஸ்டல் போலீசின் அவரச உதவி எண்ணை படகில் எழுத, அரசு உத்தரவிட்டுள்ளது. கடலுக்குள் செல்லும் மீனவர்கள், நடுக்கடலில் ஏற்படும் இயற்கை சீற்றம், படகு பழுது போன்ற பிரச்னைகள் குறித்து உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, மீட்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அந்த சூழ்நிலையில், உதவிக்காக கோஸ்டல் போலீசாரால் அவசர உதவி எண் 1093 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு, நடுக்கடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைக் கூறினால், சென்னை கன்ட்ரோல் ரூமில் இருக்கும் அதிகாரிகள், அந்த பகுதி இந்திய கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்து, உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்வர்.
அரசு உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் மீனவர்களுக்கு நன்கு தெரியும் வகையில், அவசர உதவி எண் 1093 என எழுதப்பட்டு வருகிறது. இதன் மூலம், "மீன் பிடிக்கச் சென்று பிரச்னைகளை சந்திக்கும் மீனவர்கள், இனி நடுக்கடலில் இருந்தே தகவல் தெரிவித்து உடனடியாக உதவி பெற முடியும்' என, மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment