Wednesday, December 15, 2010

பல்நோக்கு துறைமுகங்கள் அமைக்கப்பட்டால் மணப்பாடு தேவாலயம் கடல் அரிப்பினால் பாதிக்கும்

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2010,02:16
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்நோக்கு துறைமுகங்கள் அமைக்கப்பட்டால் திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் மணப்பாடு திருச்சிலுவைநாதர் தேவாலயம் போன்றவை கடல் அரிப்பினால் கடுமையாக பாதிக்கப்படும் என்று கடலோர மக்கள் கூட்டமைப்பின் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் கடலோரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள், பாதிப்புக்கள், தாக்கங்கள், சவால்கள் என்ற தலைப்பில் தூத்துக்குடியில் கருத்தரங்கு நடந்தது. கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் புஷ்பராயன் தலைமை வகித்தார். பாண்டிச்சேரி மக்கள் செயல்பாட்டுக்குழுவைச் சேர்ந்த புரோபீர், ராமநாதபுரம் டிஆர்ஆர்எம்., அமைப்பைச் சேர்ந்த கருப்பசாமி, எஸ்ஐஎன்பிஏடி கூட்டமைப்பைச் சேர்ந்த ராஜேந்திரபிரசாத், சியர்ஸ் அமைப்பினைச் சேர்ந்த அசுந்தா, தெரசிட்டா, ஜான்சன், கிருஷ்ணமூர்த்தி, ஜோன்ஸ், சிலுவை ஆகியோர் பேசினர். கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் புஷ்பராயன் பேசும்போது; மத்திய அரசு இந்திய கடலோரங்களில் 331க்கும் மேற்பட்ட பல்நோக்கு துறைமுகங்களை தனியார் பங்களிப்புடன் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த துறைமுகங்கள் அனைத்தும் ஏற்கனவே கடலோரங்களில் இயங்கி வருகின்ற தொழிற்சாலைகளுக்கும், இனிவரப்போகின்ற புதிய தொழில் திட்டங்களான அணு உலைகள், அனல்மின் நிலையங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள், மணல் கம்பெனிகள், கடலோர மற்றும் ராணுவ அமைப்புகள் அனைத்திற்கும் பயன்படுகின்ற வகையில் அமையப்போகிறது. பாண்டிச்சேரி மற்றும் தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் இப்படியான துறைமுகங்கள் அமையும் போது அல்லது 5400 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம் செய்யும் போது கடல் அரிப்பு, கடலுக்குள் மீன்பிடிக்கும் தளங்கள் பறிப்பு, வாழ்வாதாரங்கள் அழிப்பு, கடல் வளம் மாசுபாடு, உப்பளங்கள் அழிப்பு, நிலத்தடி நீர் உப்புத்தன்மையாதல், விவசாய பாதிப்பு, இந்திய நாட்டின் கடல் எல்லை குறைப்பு போன்ற தகாத படுமோசமான பாதிப்புகள் அதிகமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தற்போது சுமார் 12க்கும் அதிகமான அனல் மின் நிலையங்கள் மணப்பாடு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் துறைமுகத்தை ஆதாரமாக் கொ ண்டு கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர பெரியதா ழை, குலசேகரப்பட்டிணம், வீரபாண்டியன்பட்டிணம், புன்னைக்காயல், தூத்துக்குடி, பனையூர், வேம்பார் போன்ற கடற்கரை கிராமத்தில் மீன் இறங்குதளம் என்று சொல்லிக்கொண்டு பல்நோக்கு துறைமுகங்கள் அமையப் போகின்றன. இத்தனை துறைமுகங்களும் கட்டப்பட்டுவிட்டால் இவைகளின் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்ய, மணல் ஏற்றுமதி செய்ய என்று அனைத்து நாசகார அழிவுத் திட்டங்களும் அரங்கேறிவிடும். பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவின் தீவுகள் அழிந்து விடும். அபூர்வ உயிரினங்கள் இடம் பெயர்ந்து போகும், மீனவர்கள் மீன் பிடிக்க தடைகள் அதிகமாகும், மீனவர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக தெருவில் நிற்கும் அவலநிலை ஏற்படும், கடல் அரிப்பு அதிகமாகி கடற்கரை கிராமங்கள் நீரில் மூழ்கிவிடும், வழிபாட்டு தலங்களான திருச்செந்தூர் முருகன் கோவில், மணப்பாடு சவேரியார் வாழ்ந்த இடம் மற்றும் திருச்சிலுவைநாதர் கோ வில் அனைத்தும் கடல் அரிப்பினால் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். இதுமட்டுமல்லாது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கிவிடும். ஆகவே அனைத்து பல்நோ க்கு துறைமுகங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், கடல் வளத்தையும், உப்பளத் தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும் என்றார். காசிராஜன் நன்றி கூறினார். கருத்தரங்கில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிராம கமிட்டி பெண்கள் அø மப்பு மற்றும் ரோஜ்மாநகர், கீழமுந்தல், நரிப்பையூர், வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், அமலிநகர், பழையகாயல், லூர்த்தம்மாள்புரம், மேட்டுபட்டி, திரேஸ்புரம், புன்னக்காயல், சிங்கித்துறை ஆகிய மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment