Thursday, December 16, 2010

கடலோரங்களில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிப்புகள் , தாக்கங்கள் , சவால்கள்

கடலோரங்களில் வளர்ச்சித் திட்டங்கள்

பாதிப்புகள் , தாக்கங்கள் , சவால்கள்

கருத்தரங்கம்

நாள் : 11.12.2010

இடம்: பெல் ஹோட்டல் , தூத்துக்குடி.

ஊடகச் செய்தி

மத்திய அரசு,இந்தியக் கடலோரங்களில் 331க்கு மேற்பட்ட பல் நோக்கு துறைமுகங்களை,தனியார் பங்களிப்புடன் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த துறைமுகங்கள் அனைத்தும் ஏற்கெனவே கடலோரங்களில் இயங்கி வருகின்ற தொழிற்சாலைகளுக்கும் , இனி வரப்போகின்ற புதிய தொழில் திட்டங்களான அணு உலைகள் , எண்ணிலடங்கா அனல்மின் நிலையங்கள் , இரசாயணத் தொழிற்சாலைகள் , மணல் கம்பெனிகள் , மற்றும் கடலோர காவல் படைகள், மற்றும் இராணுவ அமைப்புகள் அனைத்தும் பயன்படுத்துகின்ற வகையில் அமையப்போகிறது. பாண்டிச்சேரி மற்றும் தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் இப்படியான துறைமுகங்கள் அமையும் போது அல்லது 5400 கோடி செலவில் தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம் செய்யும் போது , கடல் அரிப்பு,கடலுக்குள் மீன்பிடிக்கும் தளங்கள் பறிப்பு, வாழ்வாதாரங்கள் அழிப்பு, கடல் வலம் மாசுபாடு, உப்பளங்கள் அழிப்பு, நிலத்தடி நீர் உப்புத்தன்மை ஆதல் , இதனால் ,விவசாய நிலங்கள் அழிப்பு, , இந்தியா நாட்டின் கடல் எல்லை குறைப்பு போன்ற தகாத , படுமோசமான பாதிப்புகள் அதிகமாகும் .

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தற்போது சுமார் 12 கும் அதிகமான அனல் மின் நிலையங்கள் , மணப்பாடு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் துறைமுகத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்டு வருகின்றன. இது , தவிர , தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை, குலசேகரப்பட்டணம், வீரபாண்டியன் பட்டணம் , புன்னைக்காயல் , தூத்துக்குடி , பனையூர் , வேம்பார்.போன்ற கடற்கரை கிராமத்தில் மீன் இறங்குதளம் என்று சொல்லிக்கொண்டு பல் நோக்கு துறைமுகங்கள் அமையப் போகின்றன, இத்தனை துறைமுகங்களும் கட்டப்பட்டுவிட்டால் , இவைகளின் மூலம் , நிலக்கரி இறக்குமதி செய்ய , மணல் ஏற்றுமதி செய்ய , கடலுக்குள் குழாய்கள் பதித்து எரிவாயு இறக்குமதி செய்ய என்று அனைத்து நாசகார அழிவுத் திட்டங்களும் அரங்கேறிவிடும். பாதுகாக்கப்படவேண்டிய மன்னார் வளைகுடாவின் தீவுகள் அழிந்து விடும், அபூர்வ உயிரினங்கள் இடம் பெயர்ந்து போகும், மீனவர்கள் மீன் பிடிக்க தடைகள் அதிகமாகும், மீனவர் இடம்பெயர்ந்து அகதிகளாக தெருவில் நிற்கும் அவலநிலை ஏற்படும் . கடல் அரிப்பு அதிகமாகி கடற்கரை கிராமங்கள் நீரில் மூழ்கிவிடும் . வழிபாட்டுத் தலங்களான , திருச்செந்தூர் முருகன் கோவில், , மற்றும் மணப்பாடு சவேரியார் வாழ்ந்த இடம், மட்டும் திருச்சிலுவை நாதர் கோவில் அனைத்தும் கடல் அரிப்பினால் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 20,000 ஏக்கரில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கிவிடும். உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்து பிச்சை எடுக்க நேரிடும். , ஆகவே, அனைத்து பல் நோக்கு துறைமுகங்களையும் உடனடியாக நிறுத்தவும், தூத்துக்குடி துறைமுக விரிவாக்க திட்டத்தை உடனே நிறுத்தவும், தூண்டில் வளைவு என்று மீனவர்களை ஏமாற்றி ,தொழிற்சாலைகளுக்கு சாதகமாக செயல்படும் போக்கை அரசு உடனடியாக நிறுத்தவும் , மக்களின் கருத்துக்களையும் மீறி கட்டப்பட்டு வரும் 12க்கு மேற்பட்ட அனல்மின் நிலையங்களை உடனடியாக ரத்து செய்து கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் , உப்பளத் தொழிலாளர்கள் நலன் காக்கவும் , நிலத்தடி நீர் நச்சாவதை தடுத்து , கடல் அரிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று இந்தக் கருத்தரங்கத்தின் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டது.

நன்றி ,

ம. புஷ்பராயன்.

அமைப்பாளர்

வரவேற்புரை:

திரு.புஷ்பராயன் - அமைப்பாளர்,கடலோர மக்கள் கூட்டமைப்பு

பங்குபெற்றோர்:

திரு.புரோபீர் - பாண்டிச்சேரி மக்கள் செயல்பாட்டுக் குழு (Coastal Acrion Network- Pondy)

திரு.கருப்பசாமி -Director, TRRM , இராமநாதபுரம்

திரு.இராஜேந்திர பிரசாத் – அமைப்பாளர், SINFPAD கூட்டமைப்பு

திருமதி.அசுந்தா - CHEERS

திருமதி.தெரசிட்டா

திரு.ஜான்சன்

திரு.கிருஷ்ணமூர்த்தி

திரு.ஜோன்ஸ்

திரு.சிலுவை

மற்றும் தூத்துக்குடி, இராமநாதபுரம்,கடற்கரை கிராம கமிட்டி, பெண்கள் அமைப்பு

நன்றியுரை:

திரு.காசிராஜன் - SINFPAD கூட்டமைப்பு

பங்குபெற்ற கிராமங்கள் :

ரோஜ்மாநகர், கீழமுந்தல் , நரிப்பையூர், வேம்பார் , பெரியசாமிபுரம் , கீழவைப்பார், அமலிநகர் , பழையகாயல் , லூர்த்தம்மாள் புரம் , மேட்டுப்பட்டி , திரேஸ்புரம் , புன்னக்காயல் , சிங்கித்துறை

1 comment:

  1. please visit the following website from kayalpatnam, www.kayalpatnam.com They r against the TSunami rehablitation works in kombuthurai & Singithurai area in kayalpatnam municipality. Please follow this and speed up the rehablitation works.

    ReplyDelete