Thursday, September 30, 2010
ராமநாதபுரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
Wednesday, September 22, 2010
Tuesday, September 21, 2010
கடலோர மக்கள் கூட்டமைப்பு மாதக்கூட்டம் –செப்டம்பர்
கடலோர மக்கள் கூட்டமைப்பு
மாதக்கூட்டம் –செப்டம்பர்
இடம்: தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்கம் , தூத்துக்குடி.
நாள்; 21.09.2010. செவ்வாய்க் கிழமை
நேரம் : காலை 10.00 மணி
கலந்துரையாடலுக்கான கருத்துக்கள்
1. வரவேற்பு
2. அறிமுகம்
3. கடந்த கூட்ட அறிக்கை
4. வரவு – செலவு
5. மாவட்ட ஆட்சியர் மனுக்கள் – 06.09.2010.( தூத்துக்குடி & திருநெல்வேலி) – மக்கள் பங்கேற்பு
6. ஊடக செய்திகள் (தூத்துக்குடி , திருநெல்வேலி & கன்னியாகுமரி)
7. நெல்லை மாவட்ட ஆட்சியர் - உவரி கடல் அரிப்பு பார்த்தது. நெல்லை மக்களவை உறுப்பினர் மனு –
8. கன்னியாகுமரி – காணாமல் போன மீனவர்கள் & ஊடகங்கள்
9. கன்னியாகுமரி – விசைப்படகு & நாட்டுபடகு மோதல்கள்
10. நித்ரவிளையில் – கப்பல் திடீர் ஆய்வு.
11. ராஜாக்கமங்கலம் பிரச்சனை
12. கடல் அட்டை பிரச்சனை – இராமநாதபுரம் & கடல் அட்டை - ஐ.நா. வெளியீடு
13. துறைமுகங்கள் உருவாக்கம் , வளர்ச்சி . தெளிவுக்கள். – தினமணி செய்தி – 14.09.2010
14. கடலோரத்தில் அனல் மின் நிலையங்கள் பெருக்கம் தொடர்பான கூட்டு நடவடிக்கை.
15. இந்திய மீனவர்களின் மீன்பிடித்தல் – வெப்பமயமாதலுக்கு காரணம் – ஆய்வு முடிவு
16. மத்திய அரசின் கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை ஆணை ,2010 – வெளியீடு & 60 நாட்கள் கெடு.
17. சைக்கிள் பிரசரப்பயணம் – மாவட்ட முடிவுகள் & ஒத்துழைப்பு – நிதி பங்களிப்பு
18. மீனவர் நாள் நிகழ்ச்சிகள். – 21.11.2010 – மாவட்ட செயல்பாடுகள்.
19. க.ம.கூ . வழக்கறிஞர் – திரு. ஜஸ்டின் உதவ விருப்பம்.
20. தகவல் அறியும் உரிமைச் சட்டம் – க.ம.கூ பயன்படுத்துவது குறைவு - பொறுப்பு எடுத்தல்.
21. மாவட்ட பொறுப்பாளர்கள் – தங்கள் பணியின் பொறுப்பை உணர்தல், திட்டமிடுதல் & செயல்படுதல். – மாவட்ட கூட்டங்கள் நடத்துதல்.
22. மாவட்ட பிரச்சனைகளை ஊடகங்கள் கவனத்திற்கு கொண்டுவருதல்.
23. நமது அமைப்புக்கான நிதிப் பெருக்கம் – வழிவகைகள்.
24. க.ம.கூ கான மாவட்ட முகவரிகள் & இலட்சினை & தூத்துக்குடி அலுவலகத்தில் விளம்பரப்பலகை.
25. மீனவ மக்கள் கட்சி மாநாடு – அக்டோபர் - திருச்செந்தூர்
26. டி மெரிடியன் ஹோட்டல் – தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் எதிரில்.
27. மன்னார் வளைகுடாவில் ஒளிர்மிதவைகள் – தற்போது நிலை – டெல்லி பயணம்.(16)
28. தூத்துக்குடி மாவட்ட குடிமக்கள் கூட்டமைப்பு .
29. Ţɡ¸÷ °÷ÅÄõ - ¸ÄÅÃí¸û - ÌÁ¡¢ - Á¢¼¡Äõ À̾¢
30. கவனத்திற்கான பிற செய்திகள்.
Saturday, September 18, 2010
Wednesday, September 15, 2010
Tuesday, September 14, 2010
உவரியில் கடல் அரிப்பால் சாலைகள், வீடுகள் சேதம் | 8.25 கோடி திட்டத்தை உடனே நிறைவேற்ற எம்.பி. மனு
உவரியில் கற்களைக் கொட்டி கடல்அரிப்பு தடுக்கப்படும்: ஆட்சியர்
Monday, September 13, 2010
Tuesday, September 7, 2010
தினமலர் - கடலோர மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி : மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வலியுறுத்தி நேற்று கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் ஆபிஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் நேற்று கலெக்டர் ஆபிசிற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஆபிஸ் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் அவர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது;தமிழகத்தில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது போல் சுமார் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வாழும் தூத்துக்குடி மாவட்டத்திலும், மீனவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளில் இதுவரையிலும் மனுநீதி முகாம்கள் நடந்ததாக வரலாறு இல்லை. மாவட்ட நிர்வாகம் கிராம மக்களை புறக்கணிக்காமல் இம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளிலும் மனுநீதிநாள் முகாம்கள் நடத்தி கடலோர கிராம மக்களின் துன்பங்களை அறிந்து, பிரச்னைகளை புரிந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தூத்துக்குடி மாவட்ட நாட்டுபடகு மீனவர்களுக்கு அந்தந்த மீனவ கிராமங்களிலே அரசு கொடுத்த வாக்குறுதிபடி மாதத்திற்கு 300 லிட்டர் மண்ணெண்ணெய் ரேஷன் கடையில் வழங்கும் விலைக்கே வழங்க வேண்டும்.மத்திய அரசு தேசிய கடல் வளப்பூங்கா திட்டத்தை கைவிட்டு உயிர்கோள காப்பக திட்டத்தை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்பராயன் தலைமை வகித்தார். அன்டன்கோமஸ், பங்கு தந்தைகள் மரியஜான், பென்சிகர், பிரதீப், செல்வன் மற்றும் 23 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.
Monday, September 6, 2010
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டி - 06.09.2010
கடலோர மக்கள் கூட்டமைப்பு
அந்தோணியார் மீன்பிடித் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,
கூத்தென்கழி – 627 104.
நெல்லை மாவட்டம் ,
தொலைபேசி : 04637 – 275395 ;மின் அஞ்சல்: cpfsouth@gmail.com கைபேசி : 98421 54073.
நாள் ; 06.09.2010
பெறுநர்
திருமிகு. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
திருநெல்வேலி மாவட்டம்.
திருநெல்வேலி
மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு,
பொருள் : மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டி.
வணக்கம்!.
- தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது போல சுமார் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழும் திருநெல்வேலி மாவட்டத்திலும், மீனவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
- தமிழக அரசு மீனவ மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது போல, திருநெல்வேலி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கு அந்தந்த மீனவ கிராமங்களிலேயே மண்ணெண்ணெய் விற்பனை மையங்கள் அமைத்து, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் விலைக்கே, நாட்டுப் படகு ஒன்றிற்கு மாதந்தோறும் 300 லிட்டர் வீதம் வழங்கிட நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.
- தமிழக அரசின் மற்ற நலவாரியங்கள் போல மீனவர் நல வாரியத்தினையும் தொழிலாளர் நலத்துறையுடன் இணைத்து, தனி அதிகாரி, தனி அலுவலகம் அமைத்து மீனவர் நல வாரியத் திட்டங்கள் காலம் தவறாமலும், கட்சிப் பாகுபாடின்றியும் மீனவ மக்களுக்குக் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
- கடலரிப்பினால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து கடலோர கிராமங்களும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதால் அதற்கான காரணத்தினை ஆய்வு செய்து, நிரந்தர தீர்விற்கான வழிகண்டு, மீனவக் குடியிருப்புகள் மற்றும் மீனவ மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, மீன் பிடித் தொழிலுக்கான வாழ்வாதார உத்தரவாதத்தினை ஏற்படுத்தித் தரக் கோருகின்றோம்.
நன்றி
இப்படிக்கு,
சேசு அந்தோனி
தலைவர்.
நகல்: 1,மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
சென்னை
2.ஊடகத்துறைக்காக.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டி
கடலோர மக்கள் கூட்டமைப்பு
11/106 B, கேப்டன் குடியிருப்பு ,
ஆரோக்கியபுரம் முதன்மைச் சாலை,
தூத்துக்குடி-628002
தொலைபேசி: 04612361699 மின்னஞ்சல்: cpfsouth@gmail.com. கைபேசி: 9842154073
நாள்: 06.09.2010
பெறுநர்:
திருமிகு. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
தூத்துக்குடி மாவட்டம்.
தூத்துக்குடி
மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு,
பொருள் : மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டி.
வணக்கம்!.
- தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது போல சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழும் தூத்துக்குடி மாவட்டத்திலும், மீனவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளில் இதுவரையிலும் மனுநீதி முகாம்கள் நடந்ததாக வரலாறு இல்லை. ஆகவே, மாவட்ட ஆட்சியர் கடலோர கிராமங்களை புறக்கணிக்காமல், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளிலும் மனுநீதி முகாம்கள் நடத்தி கடலோர கிராம மக்களின் துன்பங்களை அறிந்து ,பிரசன்னைகளைப் புரிந்து ,அவைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
- தமிழக அரசு மீனவ மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது போல, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கு அந்தந்த மீனவ கிராமங்களிலேயே மண்ணெண்ணெய் விற்பனை மையங்கள் அமைத்து, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் விலைக்கே, நாட்டுப் படகு ஒன்றிற்கு மாதந்தோறும் 300 லிட்டர் வீதம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தமிழக அரசு இது வரையிலும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு வழங்கிவந்த 250 லிட்டர் டீசல் மானியத்தை உயர்த்தி 300 லிட்டர் வழங்கப்படும் என்று 2010 ஆம் ஆண்டு, சூன் மாதம் அறிவித்தது. அறிவித்து மூன்று மாதங்கள் ஆகியும் இது வரை உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 50 லிட்டர் டீசல் ஐ வழங்க தமிழக அரசோ , மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே 50 லிட்டர் டீசல் ஐ வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
- கடந்த பிப்ரவரி மாதம் ,தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய புயல் காற்றால் பாதிக்கப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு அறிவிக்கப்பட்ட புயல் நிவாரண உதவி ரூபாய் 59 இலட்சத்தை இனியும் காலந்தாழ்த்தாது உடனடியாக வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
- தமிழக அரசின் மற்ற நலவாரியங்கள் போல மீனவர் நல வாரியத்தினையும் தொழிலாளர் நலத்துறையுடன் இணைத்து, தனி அதிகாரி, தனி அலுவலகம் அமைத்து மீனவர் நல வாரியத் திட்டங்கள் காலம் தவறாமலும், கட்சிப் பாகுபாடின்றியும் மீனவ மக்களுக்குக் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
- 2010-2011 jkpof murpd; epjpepiy mwpf;ifapy; mwptpf;fg;gl;Ls;s kPd; FOk njhopw;Ngl;ilia flw;fiuf;Fk;> kPdtUf;Fk; vt;tpj njhlHGk; ,y;yhj J}j;Jf;Fb khtl;lk;> rhj;jhd;Fsk; tl;lj;jpYs;s “gplhNehp” fpuhkj;jpypUe;J cldbahf khw;wp kPd; njhopy; tsHr;rpf;F VJthfTk;> kPdtHfSf;F gad;gLk; tifapYk; ,e;jj; jpl;lj;ij J}j;Jf;Fb flNyhu fpuhkk; xd;wpy; mikf;f eltbf;if vLf;f வழி செய்ய வேண்டும்.
- மன்னார் வளைகுடா தேசிய கடல் வளப் பூங்கா என்ற பெயரில், தீவுகளைச் சுற்றி ஒளிர்மிதவைகள் மூலம் கடலுக்குள் வேலி அமைக்கும் திட்டம் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பெரிதும் பாதிக்கின்றது. எனவே இத்திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாக கைவிடவேண்டும். மேலும் , மத்திய அரசு தேசிய கடல் வளப் பூங்கா திட்டத்தை கைவிட்டுவிட்டு , உயிர் கோளப் காப்பகத் திட்டதை மட்டும் நடைமுறைப் படுத்த மாவட்ட நிர்வாகம் சிபாரிசு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி. இப்படிக்கு,
ம. புஷ்பராயன்.
அமைப்பாளர்,
நகல்: 1,மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
சென்னை
2.ஊடகத்துறைக்காக.