கடலோர மக்கள் கூட்டமைப்பு
அந்தோணியார் மீன்பிடித் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,
கூத்தென்கழி – 627 104.
நெல்லை மாவட்டம் ,
தொலைபேசி : 04637 – 275395 ;மின் அஞ்சல்: cpfsouth@gmail.com கைபேசி : 98421 54073.
நாள் ; 06.09.2010
பெறுநர்
திருமிகு. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
திருநெல்வேலி மாவட்டம்.
திருநெல்வேலி
மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு,
பொருள் : மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டி.
வணக்கம்!.
- தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது போல சுமார் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழும் திருநெல்வேலி மாவட்டத்திலும், மீனவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
- தமிழக அரசு மீனவ மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது போல, திருநெல்வேலி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கு அந்தந்த மீனவ கிராமங்களிலேயே மண்ணெண்ணெய் விற்பனை மையங்கள் அமைத்து, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் விலைக்கே, நாட்டுப் படகு ஒன்றிற்கு மாதந்தோறும் 300 லிட்டர் வீதம் வழங்கிட நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.
- தமிழக அரசின் மற்ற நலவாரியங்கள் போல மீனவர் நல வாரியத்தினையும் தொழிலாளர் நலத்துறையுடன் இணைத்து, தனி அதிகாரி, தனி அலுவலகம் அமைத்து மீனவர் நல வாரியத் திட்டங்கள் காலம் தவறாமலும், கட்சிப் பாகுபாடின்றியும் மீனவ மக்களுக்குக் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
- கடலரிப்பினால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து கடலோர கிராமங்களும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதால் அதற்கான காரணத்தினை ஆய்வு செய்து, நிரந்தர தீர்விற்கான வழிகண்டு, மீனவக் குடியிருப்புகள் மற்றும் மீனவ மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, மீன் பிடித் தொழிலுக்கான வாழ்வாதார உத்தரவாதத்தினை ஏற்படுத்தித் தரக் கோருகின்றோம்.
நன்றி
இப்படிக்கு,
சேசு அந்தோனி
தலைவர்.
நகல்: 1,மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
சென்னை
2.ஊடகத்துறைக்காக.
No comments:
Post a Comment