30 Sep 2010 11:52:44 AM IST
ராமநாதபுரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்,செப்.29: கடல் அட்டையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பாக ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் பால்ச்சாமி ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தார். வேதாளை சங்கு குளித்தல் தொழிலாளர் சங்கத் தலைவர் ஜப்பார் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் செயலாளர் ஜோசப் வரவேற்றரார்.
தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஏ.ஐ.டி.யூ.சி.பிரிவின் மாநிலத் தலைவர் முருகானந்தம், மீன்பிடித் தொழிலாளர் யூனியன் கூட்டமைப்பின் திருப்புல்லாணி வட்டார செயலாளர் ஹமீது இப்ராகிம் ஆகியோர் கடல் அட்டையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். ராமநாதபுரத்தில் பெய்த தொடர்மழையையும் பொருட்படுத்தாமல் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
© Copyright 2008 Dinamani
No comments:
Post a Comment