கடலோர மக்கள் கூட்டமைப்பு
11/106 B, கேப்டன் குடியிருப்பு ,
ஆரோக்கியபுரம் முதன்மைச் சாலை,
தூத்துக்குடி-628002
தொலைபேசி: 04612361699 மின்னஞ்சல்: cpfsouth@gmail.com. கைபேசி: 9842154073
நாள்: 06.09.2010
பெறுநர்:
திருமிகு. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
தூத்துக்குடி மாவட்டம்.
தூத்துக்குடி
மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு,
பொருள் : மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டி.
வணக்கம்!.
- தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது போல சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழும் தூத்துக்குடி மாவட்டத்திலும், மீனவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளில் இதுவரையிலும் மனுநீதி முகாம்கள் நடந்ததாக வரலாறு இல்லை. ஆகவே, மாவட்ட ஆட்சியர் கடலோர கிராமங்களை புறக்கணிக்காமல், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளிலும் மனுநீதி முகாம்கள் நடத்தி கடலோர கிராம மக்களின் துன்பங்களை அறிந்து ,பிரசன்னைகளைப் புரிந்து ,அவைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
- தமிழக அரசு மீனவ மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது போல, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கு அந்தந்த மீனவ கிராமங்களிலேயே மண்ணெண்ணெய் விற்பனை மையங்கள் அமைத்து, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் விலைக்கே, நாட்டுப் படகு ஒன்றிற்கு மாதந்தோறும் 300 லிட்டர் வீதம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தமிழக அரசு இது வரையிலும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு வழங்கிவந்த 250 லிட்டர் டீசல் மானியத்தை உயர்த்தி 300 லிட்டர் வழங்கப்படும் என்று 2010 ஆம் ஆண்டு, சூன் மாதம் அறிவித்தது. அறிவித்து மூன்று மாதங்கள் ஆகியும் இது வரை உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 50 லிட்டர் டீசல் ஐ வழங்க தமிழக அரசோ , மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே 50 லிட்டர் டீசல் ஐ வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
- கடந்த பிப்ரவரி மாதம் ,தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய புயல் காற்றால் பாதிக்கப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு அறிவிக்கப்பட்ட புயல் நிவாரண உதவி ரூபாய் 59 இலட்சத்தை இனியும் காலந்தாழ்த்தாது உடனடியாக வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
- தமிழக அரசின் மற்ற நலவாரியங்கள் போல மீனவர் நல வாரியத்தினையும் தொழிலாளர் நலத்துறையுடன் இணைத்து, தனி அதிகாரி, தனி அலுவலகம் அமைத்து மீனவர் நல வாரியத் திட்டங்கள் காலம் தவறாமலும், கட்சிப் பாகுபாடின்றியும் மீனவ மக்களுக்குக் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
- 2010-2011 jkpof murpd; epjpepiy mwpf;ifapy; mwptpf;fg;gl;Ls;s kPd; FOk njhopw;Ngl;ilia flw;fiuf;Fk;> kPdtUf;Fk; vt;tpj njhlHGk; ,y;yhj J}j;Jf;Fb khtl;lk;> rhj;jhd;Fsk; tl;lj;jpYs;s “gplhNehp” fpuhkj;jpypUe;J cldbahf khw;wp kPd; njhopy; tsHr;rpf;F VJthfTk;> kPdtHfSf;F gad;gLk; tifapYk; ,e;jj; jpl;lj;ij J}j;Jf;Fb flNyhu fpuhkk; xd;wpy; mikf;f eltbf;if vLf;f வழி செய்ய வேண்டும்.
- மன்னார் வளைகுடா தேசிய கடல் வளப் பூங்கா என்ற பெயரில், தீவுகளைச் சுற்றி ஒளிர்மிதவைகள் மூலம் கடலுக்குள் வேலி அமைக்கும் திட்டம் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பெரிதும் பாதிக்கின்றது. எனவே இத்திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாக கைவிடவேண்டும். மேலும் , மத்திய அரசு தேசிய கடல் வளப் பூங்கா திட்டத்தை கைவிட்டுவிட்டு , உயிர் கோளப் காப்பகத் திட்டதை மட்டும் நடைமுறைப் படுத்த மாவட்ட நிர்வாகம் சிபாரிசு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி. இப்படிக்கு,
ம. புஷ்பராயன்.
அமைப்பாளர்,
நகல்: 1,மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
சென்னை
2.ஊடகத்துறைக்காக.
No comments:
Post a Comment