Friday, November 5, 2010

கத்தார் சிறையில் இருக்கும் நெல்லை, குமரியைச் சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2010,02:55 IST
Advertisement

தூத்துக்குடி : கத்தார் சிறையில் வாடும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 41 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோர மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் அமைப்பாளர் புஷ்பராயன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கடலோர கிராம ஊர்கமிட்டி தலைவர்கள், சங்க தலைவர்கள், பொது நல அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்திய நாட்டின் கடற்கரைகளை பா துகாப்பதாக சொல்லிக்கொண்டு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தனது அமைச்சகத்தின் இணைய தளத்தில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை ஆணை 2010 என்ற பெயரில் அறிவிக்கை ஆணை ஒன்றை ஆங்கில மொழியில் மறைமுகமாக வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கு எதிராக சட்டங்களைக் கொண்டு வரும் போது, இப்படி மக்களுக்கு எட்டாத, மக்கள் பயன்படுத்தாத இணைய தளத்தில், மக்களுக்கு புரியாத மொழியில் வெளியிட்டு கருத்து கேட்கும் முறையை வன்மையாக கண்டிக்கிறோம். மீனவர்கள் தொடர்பாக அரசு எடுக்கும் எந்த முடிவுகளையும் அவரவர் தாய் மொழியிலே அறிந்து கொள்ள, பத்திரிக்கைகள் மற்றும் டிவி.,க்கள் மூலமாக பாமர மீனவர்கள் அறிந்து கொள்ள அரசு வழிமுறைகள் செய்ய வேண்டும். மீனவர்களின் நலனுக்கு எதிராக தற்போது மத்திய அரசு வெளியிட்டு இருக்கிற கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை ஆணை 2010ஐ உடனடியாக முழுமையாக திரும்பப் பெற வேண்டும். தூத்துக்குடி மாநகர கழிவுகளை சுத்திகரிப்பு செய்து, கடலுக்குள் செலுத்தும் அபாயகரமான திட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி உடனே கைவிட வேண்டும்.

புல் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தை உடனடியாக அகற்ற வேண்டும். திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளை வங்காள விரிகுடா கடல் பகுதியில் கலக்கும் தமிழக அரசின் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரைப் பகுதியில் மத்திய அரசு 45 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அமெரிக்க ரசாயனத் தொழிற்சாலை மற்றும் இந்த தொழிற்சாலைக்காக தொண்டியில் அமையவிருக்கும் துறைமுகத்தையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

கத்தார் சிறையில் வாடும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு அவர்களின் குடும்ப வருமான இழப்பிற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தகுந்த போதிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


No comments:

Post a Comment