Thursday, November 18, 2010

கடலோர மக்கள் கூட்டமைப்புக் கூட்டம்

18 Nov 2010 02:34:56 PM IST

கடலோர மக்கள் கூட்டமைப்புக் கூட்டம்

தூத்துக்குடி, நவ. 17: கடலோர மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், அதன் அமைப்பாளர் ம. புஷ்பராயன் தலைமையில் தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நவம்பர் 21-ம் தேதி மீனவர் தினத்தை மீனவர்களுக்கான உரிமை தினமாக கடைப்பிடிக்க வேண்டும்.
அன்றைய தினம் கிராமங்கள் தோறும் மீனவர் தின நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
வேம்பார், பெரியசாமிபுரம், திரேஸ்புரம், கீழவைப்பார், சிப்பிகுளம், தருவைக்குளம், வெள்ளப்பட்டி, புன்னக்காயல், அமலிநகர், வீரபாண்டியன்பட்டினம் ஆகிய இடங்களில் கருத்தரங்கு, கலை நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்.
மேலும், கல்லாமொழியில் மாநாடு நடத்த வேண்டும்.
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமை தினத்தன்று தூத்துக்குடியில் மீனவர்கள் மனித உரிமை சங்கிலி நடத்த வேண்டும்.
மீனவர் உரிமைகளை நிலை நாட்டும் ஒன்றிணைப்பை வெளிப்படுத்த வேண்டும்.
மீனவ மக்களின் கோரிக்கையினை ஏற்று மண்ணெண்ணெய் மானியம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு, இதன் பயனை மீனவர்கள் நிரந்தரமாக பெற்றிட இந்த அறிவிப்பை சட்டமாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment