Thursday, November 18, 2010

மண்ணெண்ணெய் மானியம் வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி:மீனவர் கூட்டமைப்பு!

மண்ணெண்ணெய் மானியம் வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி:மீனவர் கூட்டமைப்பு!

புதன் 17, நவம்பர் 2010 5:52:34 PM (IST)

கடலோர மக்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்டக் கூட்டத்தில் மீனவர் தினத்தினை மீனவர்களுக்கான உரிமைகள் தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் ம.புஷ்பராயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நவம்பர் 21 மீனவர் தினத்தினை மீனவர்களுக்கான உரிமை தினமாக கடைப்பிடிப்பது எனவும், கிராமங்கள் தோறும் மீனவர் தின நிகழ்ச்சிகள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மீனவ மக்களின் கோரிக்கையினை ஏற்று மண்ணெண்ணெய் மானியம் வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்பதோடு, இதன் பயனை மீனவர்கள் நிரந்தரமாக பெற்றிட இந்த அறிவிப்பை சட்டமாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

வேம்பார், பெரியசாமிபுரம், திரேஸ்புரம், கீழவைப்பார், சிப்பிகுளம், தருவைக்குளம், வெள்ளப்பட்டி, புன்னைக்காயல், அமலிநகர், வீரபாண்டியபட்டினம் ஆகிய இடங்களில் கருத்தரங்கு, கலை நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், மீனவர் தினமான நவம்பர் 21 அன்று கல்லாமொழியில் மாநாடு மற்றும் டிசம்பர் 10 மனித உரிமை தினத்தன்று தூத்துக்குடியில் மீனவர்கள் மனித உரிமை சங்கிலி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.இந்த மனித சங்கிலியில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் விசயங்கள் குறித்து அரசிடம் கோரிக்கை வைக்கவும், மீனவர் உரிமைகளை நிலை நாட்டும் ஒன்றிணைப்பை வெளிப்படுத்தவும் தீர்மானம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment