Monday, November 1, 2010

மண்ணெண்ணெய் மானியமா ? தேர்தல் நாடகமா?

கடலோர மக்கள் கூட்டமைப்பு

19/1,மனுவேல் சேக்கப் லேன், தூத்துக்குடி628001.

தொலைபேசி : 0461 2361699

மின்னஞ்சல் : cpfsouth@gmail.com

அலைபேசி: 98421 54073.

நாள் : 01.11.2010.

ஊடகச் செய்தி


மண்ணெண்ணெய் மானியமா ? தேர்தல் நாடகமா?


தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதி கடந்த அக்டோபர் 30 ஆம் நாள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு படகு ஒன்றுக்கு 200 லிட்டர் வீதம் ஒரு லிட்டர் ரூபாய் 25 க்கு மாதந்தோறும் மண்ணெண்ணெய் மானியம் தரும் அறிவிப்பு வெறும் தேர்தல் நேர அறிவிப்பாகும்.

இந்த மானிய விலையில் வழுங்குவது மண்ணெண்ணெய் என்பது மத்திய அரசின் ஒதுக்கீட்டிலா? மாநில அரசின் ஒதுக்கீட்டிலா? அல்லது தழிழக அரசின் தேர்தல் நேர இலவசத் திட்டமா?என்பதை முதல்வர் அறிவிக்கவில்லை. இது தேர்தல் திட்டமா?அல்லது தமிழக அரசின் கொள்கை முடிவா என்பது சூசகமாக உள்ளது.

மண்ணெண்ணை வழங்க எவ்வித மண்ணெண்ணை விற்பனை நிலையங்களையும் கிராமங்களில் ஏற்பாடு செய்யாமல், மண்ணெண்ணை மானியம் கொடுப்பது என்பது செக்கு இல்லாத ஊரில் எண்ணைக் கடை/ஆலை வைப்பது போன்று.

மண்ணெண்ணெய் மானியம் குறித்து அரசின் பத்திரிக்கை செய்தி தமிழக அரசின் இணையதளத்தில் ஏன் வெளியிடப்படவில்லை? ஆசிய வளர்ச்சி வங்கிக்கு பயமா?

ஏனெனில் , ஆழிப்பேரலை அழிவுக்குப் பிறகு , ஆசிய வளர்ச்சி வங்கியின் நிர்பந்தத்தால் மத்திய, மாநில அரசுகள் ,இனிமேல் இந்திய கடற்கரைகளில் கடற்கரை சார்ந்த மீன்பிடிப்பு ஒழிக்கப்பட்டு , இனி வரும் காலங்களில் ,துறைமுகம் சார்ந்த மீன்பிடி முறைதான் இனிமேல் இருக்கவேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்து விட்டனர். அதனால் தான் இந்தியாவின் 7500 கிலோமீட்டர் நீளம் கொண்ட கடற்கரையில் மத்திய அரசு 300 பல்நோக்கு தனியார் துறைமுகங்கள் அமைக்க திட்டம் வைத்துள்ளது.

இந்தக் கொள்கை முடிவினால் இனிமேல் இந்திய , தமிழகப் கடற்கரைப் பகுதிகளில் கட்டுமரங்களோ அல்லது நாட்டுப்படகோ வைத்து மீனவர்கள் தொழில் செய்ய முடியாது. கடற்கரை கிராமங்களும் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் , இனி இத்தகைய படகுகளுக்கு அரசின் சார்பில் மண்ணெண்ணெய் மானியமும் வழங்க வேண்டிய அவசியமில்லை.ஆகவேதான், இது நாள் வரையிலும், மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என்பது மீனவர்களுக்குத் தெரியும். இந்த மானிய அறிவிப்பால் மீனவர்கள் புழங்காகிதம் அடைந்து விட்டனர் என்று சொல்லி தி.மு.க ஆதரவாளர்களை வைத்து தொலைக்காட்சி, செய்திதாள் வழியாக பேட்டி கொடுக்க வைப்பது மக்கள் அனைவருக்கும் புரியும் . இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.

கடலோர மக்கள் கூட்டமைப்பின் சார்பாக கடந்த அக்டோபர் 25 மற்றும் 29 ஆம் நாட்களில் இராமநாதபுரம், தூத்துக்குடி , ிருநெல்வேலி மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010ஐ எதிர்த்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் மீனவர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தியதின் காரணமாக கருணாநிதி பயந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இப்படி எந்த வித நிதி ஆதாரமும் இல்லாமல் அறிவித்திருப்பது தேர்தல் நேர சதித் திட்டம். தேர்தலில் மீனவர் ஓட்டு தி.மு.க வுக்கு கிடைக்காதோ என்ற தேர்தல் பயம். என்றே மீனவர்கள் கருதுகின்றனர்.

கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010ஐ எதிர்த்து நடைபெற்ற மீனவர் போராட்டத்திற்கு பதில் சொல்லுவதை விட்டுவிட்டு , மீனவர்களின் எதிர்ப்பு குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு போய் கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010ஐ கைவிடச் சொல்லி மத்திய அரசை வலியுறுத்துவதை விட்டுவிட்டு , கத்தார் சிறையில் இருக்கும் 43 மீனவர்களை விடிவிக்க கடிதம் எழுதுவது ,மண்ணெண்ணெய் மானியம் வழக்குவது கண்டு மீனவர்கள் ஏமாந்து போய்விட மாட்டார்கள். கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010 கைவிட தமிழக அரசு என்ன செய்யப்போகிறது ? என்பதை முதல்வர் அவர்கள் அறிவிக்க வேண்டும். மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.

மீனவர்களது கோரிக்கை என்பது மண்ணெண்ணெய் மானியம் உற்பத்தி விலையிலோ அல்லது இறக்குமதி விலையிலோ வழங்க வேண்டும் என்பதுதான். மத்திய, மாநில அரசுகள் இதனை நிறைவேற்றுவதோடு, வழங்கப்படும் மண்ணெண்ணெய் அந்தந்த மீனவ கிராமங்களிலேயே வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில் வெறும் அறிவிப்பாக மட்டுமே அமைந்துவிடும்.

கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் (2006-ல்) மண்ணெண்ணெய் மானியம் வழங்கப்படுவதாக அப்போதைய முதல்வர் அறிவிப்பு செய்தார். தேர்தல் வரும் வரை மூன்று மாதங்கள் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மானியம் பின்னாளில் நிறுத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

இவண்

புஷ்பராயன்

அமைப்பாளர்


1 comment:

  1. Dear Rayan, the write up is very good analysis and everybody needs to raise these questions. People are easily diverted with few welfare schemes and unable to understand the hidden agendas come as free of cost. There was no response for the protest CRZ 2010 from the Government but for a welfare scheme without any finance memorandum attached to the welfare scheme. Good analysis. CPF people should help the community to understand the hidden motives.Keep up the good work. Rajen

    ReplyDelete