Saturday, August 28, 2010

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மறியல்: 10 பேர் கைது

24 Aug 2010 01:44:53 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மறியல்: 10 பேர் கைது


தூத்துக்குடி, ஆக. 23: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மறியலில் ஈடுபட்டதாக 10 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்த போராட்டக் குழுவினர் திடீரென தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலுக்கு போராட்டக் குழு தலைவரும், தாமிரபரணி நதிநீர்பாதுகாப்பு பேரவை அமைப்பாளருமான எஸ். நயினார் குலசேகரன் தலைமை வகித்தார்.
நாம் தமிழர் இயக்க அமைப்பாளர் பிரபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் அ. மோகன்ராஜ், மாதர் சங்க நிர்வாகி மடோனாள், மக்கள் உரிமைக் கழக அமைப்பாளர் அதிசயகுமார், கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்பராயன், வீராங்கனை அமைப்பின் அமைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு, ம.தி.மு.க.வைச் சேர்ந்த நக்கீரன், மகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், நயினார் குலசேகரன், வழக்கறிஞர் பிரபு, பாத்திமா பாபு உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment