Saturday, August 28, 2010

இலங்கை பிளாஸ்டிக் கழிவுகளா ல் தமிழகத்தி ற் கு ஆ ப த் து

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2010,23:04 IST

ராமநாதபுரம்: இலங்கையின் பிளாஸ்டிக் உபயோகப் பொருட்கள் கடல் வழியாக தமிழகத்தில் கரை ஒதுங்கி, ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பில் பிளாஸ்டிக் பயன்பாடு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு, இந்திய அளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடல் வாழ் உயிரினங்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளது.


இதன் காரணமாகவே, ராமேஸ்வரம் தீவில் பிளாஸ்டிக் மீதான தடை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு 75 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கடலோரம் கொட்டப்படும் சமையல் எண்ணெய் மற்றும் குளிர்பான பாட்டில்கள், பெண்கள் பயன்படுத்தப்படும், "நாப்கின் பேட்' உறைகள், பாலித்தீன் பேப்பர்கள் போன்ற கழிவுகள், கடல் வழியாக வந்து, தமிழக கடலோர பகுதிகளில் ஒதுங்கி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறது. இதனால், பவளப்பாறைகளின் சுவாசம் பாதிக்கப்படும். மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கரை ஒதுங்கும் அவை, அப்புறப்படுத்தப்படாததால் புதைந்து விடுகின்றன. இலங்கையின் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், தமிழக சுற்றுச்சூழலை சீரழித்து வருவது வேதனை.


No comments:

Post a Comment