Tuesday, July 20, 2010

ராமநாதபுரத்தில் ஜூலை 19 மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


09 Jul 2010 11:22:26 AM IST

ராமநாதபுரத்தில் ஜூலை 19 மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூலை 8: மன்னார் வளைகுடா மீனவ மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வரும் ஜூலை 19 ஆம் தேதி வனத் துறையினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வியாழக்கிழமை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மீனவ மக்கள் பாதுகாப்பு இயக்கக் கூட்டம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் தலைவர் பால்ச்சாமி தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு செயலாளர் ஜோசப், கடலோர மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராயன், செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவல் துறையினர் அனுமதி மறுத்ததால், ஜூலை 7 ஆம் தேதி வனத் துறையினரைக் கண்டித்து நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தை ஜூலை 19 ஆம் தேதி நடத்துவது எனவும், அதனை மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் இயக்குநர் அலுவலகம் முன்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பாரம்பரிய மீனவர் சங்கங்களை ஒருங்கிணைத்து நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், ஏ.ஐ.டி.யூ.சி. மீனவத் தொழிலாளர் சங்கத் தலைவர் முருகானந்தம், மதிமுக மண்டபம் ஒன்றியச் செயலர் பேட்ரிக், மீனவர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் தில்லை பாக்கியம், மீனவர் முன்னேற்ற இயக்க தலைவி இருதயமேரி உள்ளிட்ட மீனவ கிராமப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment