Tuesday, October 12, 2010

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி; தூத்துக்குடி போராட்ட குழு பேரணி

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2010,02:18 IST

தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு சார்பில் நேற்று பேரணி நடந்தது. இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்களும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டகுழு சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று மக்கள் திரள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிலிருந்து இந்த பேரணியை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் நயினார்குலசேகரன் தொடக்கி வைத்தார். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமாபாபு பேரணிக்கு தலைமை வகித்தார். இந்த பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் எம்எல்ஏ., அய்யலுச்சாமி, நகரச் செயலாளர் ஞானசேகர், மதிமுக., மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத், வரதராஜன் எம்எல்ஏ., மாவட்ட செயலாளர் ஜோயல், நாசரேத் துரை, மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் நக்கீரன், மகாராஜன், பாஜக., மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பொன்லிங்கம், ஒன்றிய பொதுச் செயலாளர் சரவணக்குமார், நாம் தமிழர் மாவட்ட செயலாளர் பிரபு, மத்திய வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் நடராஜன், கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரிமைந்தன், விசைபடகு தொழிலாளர் சங்க தலைவர் பார்த்தீபன், பாமக., மாநில கொள்கை விளக்க அணித்தலைவர் வியனரசு, எச்எப்ஓ., தொண்டு நிறுவன இயக்குனர் சில்வர்ஸ்டர், டிஎம்எஸ்எஸ்., தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜீலா, தூத்துக்குடி வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த அதிசயகுமார், பெண்கள் இணைப்புகுழு மாவட்ட செயலாளர் அருட்செல்வி, ஜனநாயக மீனவர் மீன்சார்பு தொழிலாளர் சங்க தலைவர் ஜார்ஜ் கோம்ஸ், மீனவர் இளைஞர் இயக்கம் தலைவர் தென்னவன், சமத்துவ மக்கள் கட்சி இளைஞர் அணிச் செயலாளர் வில்சன், மாநகரச் செயலாளர் அற்புதராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழினியன், டாக்டர் உசேன், கடலோர மக்கள் கூட்டமைப்பு புஷ்பராயன், தமிழக மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் சாதிக்பாட்சா, பரதர் நலச் சங்க ஜான்சன், பயணியர் நலச்சங்கத்தை சேர்ந்த பிரமநாயகம், பேட் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், தியாகிகள் சங்கத்தை சேர்ந்த பொன்னையாபிள்ளை உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று நடந்த பிரமாண்டமான பேரணியில் ஏராளமான அளவில் கல்லூரி மாணவிகளும், பெண்களும் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஸ்டெர்லைட் ஆலை மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வேஷமிட்டு நடித்து காட்டினர். ராஜாஜி பூங்கா முன்பிலிருந்து தொடங்கி பேரணி அண்ணாசிலை, பாலவிநாயகர் கோவில் தெரு, எட்டையாபுரம் ரோடு, வடக்கு ரதவீதி, பாலகிருஷ்ணா தியேட்டர் வழியாக பழைய மாநகராட்சி அருகில் முடிவைடைந்தது.


No comments:

Post a Comment