Tuesday, October 12, 2010

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரணி

12 Oct 2010 11:44:05 AM IST

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரணி


தூத்துக்குடி, அக். 11: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலும் மூட வலியுறுத்தி, போராட்டக் குழு சார்பில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து பேரணியை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுத் தலைவர் எஸ். நயினார் குலசேகரன் தொடங்கி வைத்தார்.
போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு பேரணிக்கு தலைமை வகித்தார்.
பேரணியில் இந்திய கஹம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் அ. மோகன்ராஜ், ம.தி.மு.க. மாநில கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத், விருதுநகர் எம்.எல்.ஏ. வரதராஜன், மாவட்டச் செயலர் எஸ். ஜோயல், மாநில துணைப் பொதுச்செயலர் நாசரேத் துரை, பா.ம.க. மாநில கொள்கை விளக்க அணி தலைவர் அ. வியனரசு, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணி செயலர் எம்.எக்ஸ். வில்சன், நகரச் செயலர் பி.எம். அற்புதராஜ், பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச்செயலர் இ.பா. ஜீவன்குமார், நாம் தமிழர் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தா.மி. பிரபு, தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க பொதுச்செயலர் யு. நடராஜன், கடலோர மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராயன், கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை சுந்தரி மைந்தன், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம். கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய மீனவர் சங்க தலைவர் ஜி. அன்டன் கோமஸ் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த திரளானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணி, பாளையங்கோட்டை சாலை, பாலவிநாயகர் கோயில் தெரு, ஜி.சி. சாலை முக்கிய சாலைகள் வழியாக தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முடிவடைந்தது.
அங்கு பேரணியை நிறைவு செய்து ஆர்.நல்லகண்ணு பேசினார்.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment