Sunday, October 17, 2010

கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கையை முற்றிலும் கைவிட மீனவர்கள் கோரிக்கை

16 Oct 2010 02:23:53 PM IST

கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கையை முற்றிலும் கைவிட மீனவர்கள் கோரிக்கை


தூத்துக்குடி, அக். 15: மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை ஆணை 2010-ஐ முற்றிலுமாக கைவிட வேண்டும் என, மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
திருசெந்தூர் அருகே கல்லாமொழியில் கடலோர மக்கள் கூட்டமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மீனவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
முத்துக்குழித்துறை மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
கடலோர மக்கள் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஜார்ஜ் கோமஸ், ஒருங்கிணைப்பாளர் ஜெ.பிரபாகர், மணப்பாடு பங்குத்தந்தை ஜெயக்குமார், கரங்கள் கூட்டமைப்பின் திருநெல்வேலி மாவட்டத் தலைவி பாத்திமா, தூத்துக்குடி மாவட்டத் தலைவி செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அருள்தந்தை உபார்டஸ் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.
கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் ம. புஷ்பராயன் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணை குறித்து பேசினார்.
இக்கருத்தரங்கில் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குளி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை, அமலிநகர், ஆறுமுகனேரி, சிங்கித்துறை, வீரபாண்டியபட்டணம், புன்னைகாயல், பழையகாயல் உள்ளிட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணை என்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால், அச்சட்டத்தை அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும்.
மேலும், இது தொடர்பாக நாடு தழுவிய அளவில் நடைபெறும் மீனவ அமைப்புகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment