Monday, June 7, 2010

மீனவர்கள் கருப்புக் கொடி எதிர்ப்பு


தூத்துக்குடி அருகே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை செய்துள்ளதாக வந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கு ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி திரேஸ்புரம், மாதா நகர், முத்தரையர் காலனி பகுதியில் உள்ள மீனவர்கள் தங்கள் வீடுகளிலும் நாட்டுப்படகுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கட்சத் தீவுகளுக்கு உரிமை கோரும் இந்த நேரத்தில் சொந்த தீவுகளில் மீன் பிடிக்கும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அடுத்த மிகப் பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க வேண்டியதுவரும் என்று தூத்துக்குடி வடபகுதி மீனவர் சங்க தலைவர் ஜாண்சன் சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் இஸ்மாயில், முத்தரையர் சமுதாயத் தலைவர் முனியசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment