Tuesday, June 15, 2010

Ramand Dinamani Reports Tourism Plans at GoM

23 May 2010 10:57:37 AM IST

"பவளப் பாறைகளை கண்டு மகிழ மேலும் 5 கண்ணாடிப் படகுகள்'
ராமநாதபுரம்,மே 22:கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் வண்ண மீன்களைசுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் படகுகளுக்கு அடியில் கண்ணாடி பொருத்தப்பட்ட 5 கண்ணாடி அடிப்படகுகள் வாங்கப்பட இருப்பதாக, மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையின் இயக்குநர் அருணாபாசு சர்க்கார் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் நடந்த சர்வதேச பல்லுயிர் பெருக்கு தின விழாவுக்குத் தலைமை வகித்து, அவர் மேலும் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் மே 22 ஆம் தேதியை உலக பல்லுயிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அரியவகை கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும், அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 2002 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை அரசால் தொடங்கப்பட்டது.

மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும், மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பற்றிய விழிப்புணர்வு அறக்கட்டளை மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

10-ம் வகுப்பு, பிளஸ் 2 படித்து முடித்த மீனவர்களின் குழந்தைகளை நர்ஸ் படிப்பு படிக்க வைத்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் 70 இளைஞர்கள் சுயதொழில் பயிற்சிக்காக பாலிடெக்னிக்குகளில் அறக்கட்டளை மூலமாகச் சேர்க்கப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
களி நண்டு உற்பத்தி மற்றும் கடல் மீன் பொரிப்பகம் ஆகியனவற்றையும் அறக்கட்டளை மூலம் செய்து வருகிறோம்.

முக்கியமாக கடல் விவசாயத்தைப் பெருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதிரி மீன் பண்ணைகள் விரைவில் அமைக்கப்படவுள்ளன. இதனை மீனவர்கள் பார்வையிட்டு அதேபோல அமைத்து, பொருளாதார ரீதியில் முன்னேறவும் அறக்கட்டளை உதவி செய்ய இருக்கிறது.

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ராமேசுவரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்திட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தற்போது கடல் ஆமைகளைக் கொலை செய்வதும், பிடிப்பதும் மிகவும் குறைந்துள்ளது என்றார் அருணாபாசு சர்க்கார்.

© Copyright 200

No comments:

Post a Comment