Tuesday, June 15, 2010

Dinamalar Publishes Ramnad Collector's Press Statement on 27th May,2010 Permitting Tourism and banning Fishing

ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகள் கொண்ட பகுதியை, தேசிய பூங்கா பயன்பாட்டுக்கு ஜூனில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அரிய வகை உயரினங்கள் கொண்ட மன்னார் வளைகுடாவானது 10 ஆயிரத்து 500 ச.கி.மீ., பரப்பளவு கொண்டதாகும். இப்பகுதி ஆசிய நாடுகளில் அமைந்த முதல் கடல்வள சேமப்பகுதியாகும். இதை கருத்தில் கொண்டு கடந்த 1986ல் இங்கு "தேசிய பூங்கா' உருவாக்கப்பட்டது. இலங்கையின் உள்நாட்டு போர், கடத்தல்காரர்கள் அட்டூழியம் போன்றவற்றால் பூங்காவின் பயன்பாடு பொதுமக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வனத்துறையினரின் கண்காணிப்பில் மட்டுமே இருந்து வந்த இத்தீவுகளை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மன்னார் வளைகுடாவை நான்கு பகுதிகளாக பிரித்துள்ளனர். வேம்பார், கீழக்கரை, மண்டபம், தூத்துக்குடி பிரிவுகளில் இப்பூங்கா செயல்பட உள்ளது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாகம் மூலம் பூங்கா செயல்பட உள்ள நிலையில், இங்கிருந்தப்படி படகில் தீவுகளில் சென்ற வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்திலிருந்து பயன்பாட்டுக்கு வர உள்ள இப்பகுதியில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை மீனவர்களுக்கு தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது: ஏற்கனவே பூங்காவாக இப்பகுதி இருந்தும், தற்போதுதான் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட பகுதியில் கடற்பூங்கா செயல்படும். படகில் செல்லவும் அனுமதி உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment