06 Jun 2010 03:29:15 AM IST
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: மன்னார் வளைகுடாவில் மீனவர்கள் போராட்டம்
தூத்துக்குடி, ஜூன் 5: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் முடிவை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் சனிக்கிழமை தங்கள் வீடுகள் மற்றும் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
மன்னார் வளைகுடா பகுதியில் சுற்றுலா பயணிகளை அனுமதித்தால் மீன்வளம் பாதிக்கப்படும். அதன் மூலம் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என கூறி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி திரேஸ்புரம், சங்குகுளி காலனி, தாளமுத்துநகர், வெள்ளப்பட்டி, தருவைகுளம், சிப்பிகுளம், வேம்பார் போன்ற மாவட்டத்தின் வடக்கு கடலோர கிராமங்கள் அனைத்திலும் மீனவர்களின் வீடுகளில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டிருந்தன.
© Copyright 2008 Dinamani
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment