Tuesday, June 15, 2010

Ms.Leema Rose CP M , MLA Records CPF 'S Demand in TN State Legislature on 04.05.2010

மீனவர் நலவாரியத்தின் நோக்கம் நிறைவேறவில்லை : ஆர்.லீமாறோஸ்
சென்னை,மே.4-

மீனவர் நலவாரியத்தின் நோக்கம் நிறைவேறாமல் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் லீமாறோஸ் கூறினார்.

சட்டப்பேரவையில் செவ்வா யன்று (மே.4) மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மானியக் கோரிக்கையின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அவர்பேசியது வருமாறு:

மத்திய அரசு கொண்டு வந்த கடலோர ஒழுங்குமுறை சட்டம் -2009 முழுமையாக கைவிடப்பட்டதா என தெரியவில்லை. இந்நிலையில் கட லோர மண்டல ஒழுங்காற்று விதி முறை - 2010 என்ற ஒன்றை இணைய தளத்தில் வெளியிட்டு மே 30க்குள் மக்களின் கருத்து கேட்கப்பட்டுள் ளது. இது எந்த வகையிலும் மீனவ மக்களின் உரிமைகளையும், நலன்க ளையும் பாதிக்காத வண்ணம் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் 10 லட்சம் மீன வர்கள் கடலையும், கடற்கரையையும் நம்பி வாழ்கின்றனர். கடல் நீரோட் டம், புயல், படகு இயந்திரக் கோளாறு காரணமாக சில மீன்பிடிபடகுகள் திசை மாறி செல்கின்றன. அப்படியே எல்லையை கடந்து சென்று விட்டா லும் அவர்களை திருப்பி அனுப்புவது தான் மனிதாபிமான முறை.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்த பிறகும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடித்துச் செல்லப்படுவதும், தாக்குத லுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாகை, குமரி, புதுக்கோட்டை, இராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றார்கள். ஆகவே, இந்த மீனவர் களை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அடிக்கடி கடலில் இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் உயிர்ச்சேதத்திற்கு மட்டும் நிவாரண நிதி வழங்கப்படுகி றது. ஆனால் படகு, கருவி, நீரில் மூழ் கினால் நிவாரணம் கிடைக்கப்பெறு வதில்லை. இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். கடலில் காணா மல் போனவர்களை காணாமல் போனவர் என அறிவிக்க 7 ஆண்டுகள் ஆகவேண்டும் என்றிருப்பதை

1 வருடமாக குறைக்க வேண்டும்.

நவம்பர் மாதம் ஏற்பட்ட பியான் புயலில் சிக்கி குமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட 8 மீனவர்கள் இறந்ததுடன் ரூ. 32 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இறந்தவர்க ளின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. இதர இழப் பீடுகளும் வழங்கப்பட வேண்டும்.

நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் வட்டம் அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்திலிருந்து 2008ம் ஆண்டு கடலில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்து அறுவை சிகிச்சை, மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அவ் விரு குடும்பங்களுக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உதவி கேட்டு அந்த மாவட்ட நிர்வாகத்திட மிருந்து வந்த கோரிக்கை நிறைவேற் றப்படவில்லை. இது நிறைவேற்றப் பட வேண்டும்.

தொடர்ந்து தமிழகத்தினுடைய மீனவர்கள் தங்களுடைய மீன்பிடித் தொழிலின் மூலம் காணாமல் போவது, தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங் களை தடுத்து நிறுத்துகின்ற வகையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மிக மிக வேகமாக வளர்ந்து வரும் சூழலில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடு வோருக்கு ழுடடியெட யீடிளவைiடிniபே ளலளவநஅ ஏற்படுத்தி விபத்துக்குள்ளாகும் படகு களில் இருப்போரை உடனுக்குடன் காப்பாற்ற திட்டம் வகுக்க வேண்டும்.

மீனவர்களுக்கு வழங்கும் பஞ்ச கால நிவாரண நிதி உயர்த்தப்பட வேண்டும். பெண்கள் மற்றும் உள் நாட்டு மீனவர்களுக்கும் இத்திட் டத்தை விரிவுபடுத்த வேண்டும். மீன வர் நலவாரியங்களில் தொழிற் சங்கங்களுக்கு முன்னுரிமை வழங் கப்படாததால் உறுப்பினர் பதிவில் முன்னேற்றம் இல்லாததுடன் வாரியத் தின் நோக்கம் நிறைவேறாமல் உள்ளது. இக்குறை சரிசெய்யப்பட வேண்டும்.

வெளிப்பொருத்தும் என்ஜின் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் மீன்வளத்துறை மூலம் விநியோகிக்கப் படாததால் மீன்பிடித் தொழிலாளர் கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார் கள். உதாரணமாக குமரி மாவட்டத் திற்கு தேவை 2000. கிடைத்திருப்பதோ 325 மட்டும். எனவே என்ஜின் விநி யோகம் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். படகுக்கு நிறுத்தப்பட்ட டீசல் மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

சிங்காரவேலர் மீனவர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வந்தது. 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இத்திட்டத்தை மீண் டும் அமலாக்குவதுடன், வீட்டின் பரப்பளவையும், தொகையையும் அதிகப்படுத்த வேண்டும்.

கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் வரை உள்ள குடிசை வீடுகள் மற்றும் அரசு கட்டிக்கொடுத்த பழைய வீடுகளுக்கு பதிலாக சுனாமி நிதியிலிருந்து புதிய வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு பேரூராட்சி மற்றும் தூத்தூர் ஊராட் சியில் கணக்கெடுப்பு நடத்தப்பட் டது. அதற்கான நிதியை ஒதுக்கி பணியை துரிதப்படுத்த வேண்டும்.

நீரோடி முதல் இரயுமன்துறை வரையுள்ள விடுபட்ட பகுதிகளில் கடலரிப்பு தடுப்புச் சுவர்களை கட்ட வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் மீன்பிடித் துறைமுகம் இடையிடையே ஏதேதோ காரணங் களால் வேலை நிறுத்தப்படுகிறது. விரைந்து அந்த துறைமுகப் பணியை முடிக்க வேண்டும். மேலும், குளச்சல் வர்த்தகத் துறைமுகத்தை நிறைவேற் றித் தர தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

குமரி மாவட்டத்தில் மீனவ கூட்டு றவு சங்கங்கள் நடத்தும் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அரசாணை 289, நாள் 28.9.2007ன்படி ஊதியம் வழங்கிட வேண்டும். மீனவளத்துறை யில் ஏ.டி. பணியிடம் உள்பட ஏராள மான காலிப் பணியிடங்கள் நிரப் பப்பட வேண்டும்.

No comments:

Post a Comment