தமிழக மீனவர்களை தாக்கி மீன்கள் பறிப்பு : தமிழக மீனவர்களை நடுக்கடலில், இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்றுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம், 694 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவு வழக்கம் போல், இலங்கை கடல் பகுதிக்குள் மீனவர்கள் செல்ல முயன்றபோது,ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை தடுத்து திருப்பி அனுப்பினர். கடற்படையினருக்கு போக்குகாட்டி, வேறு பகுதிக்கு சென்ற படகுகளில் உள்ள மீனவர்களை தாக்கி, இறால் மீன்களையும் பறித்துள்ளனர். நேற்று காலை, கரை திரும்பிய மீனவர்கள் சூசை, அல்போன்ஸ் கூறியதாவது: வழக்கத்தைவிட நேற்று காற்று குறைவாக இருந்ததால், இலங்கை கடற்படையினர் பலமுறை கடலில் ரோந்து வந்தனர். நடுக்கடலில் படகை வழிமறித்து மீனவர்களை தாக்கிய கடற்படையினர், 20 க்கும் மேற்பட்ட படகில் இறால் மீன்களையும் பறித்தனர் என்றனர். கடலுக்கு சென்று, மீன்பிடிக்க துவங்கி 10 நாட்கள்கூட முடியாத நிலையில், கடற்படையினர் மீனவர்களை தாக்க துவங்கி உள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுத்து நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மீனவர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment